காஷ்மீர், :ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக கருத்துதெரிவித்த ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம் என, ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது அரசியல்சாசன சட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக நீக்கியமுடிவை, மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலைநிறுத்தவும், ஜம்மு – காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணைநிற்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம்‘ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவுத்தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், ‘சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என்று கூறுகின்ற ப.சிதம்பரத்துக்கு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்புஇருக்கலாம். இதேபோல், திக்விஜய் சிங்கும் பேசியுள்ளார். இவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அனுமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |