தெலங்கானா மாநிலத்தின் பாரதிய ஜனதாவை சேர்ந்த ரகுநந்தன் ராவ். 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்விய டைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் துபகா தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பாஜக ரகுநந்தன் ராவை நம்பிக்கையுடம் மீண்டும் நிறுத்தியிருந்தது. இதனிடையே வாக்குப்பதிவுகள் முடிவடைந்தநிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர ஜனதா சமிதி வேட்பாளர் சோலிபெட்ட சுஜிதா முன்னிலைவகித்தாலும் பின்னர் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் அதிக வாக்குகள் பெற்று 3 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு வெற்றி வாகைச்சூடியுள்ளார். இதன்மூலம் தெலங்கானா சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் ஓரிருமாதங்களில் ஹைதராபாத்தில் நகராட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் இந்த எழுச்சி கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |