அமித்ஷா இனி ஒவ்வொரு மாதமும் மேற்குவங்கம் வருவார்

அமித்ஷா இனி ஒவ்வொரு மாதமும் மேற்குவங்கம் வருகைதர உள்ளதாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் முடியும்வரை தொண்டர்களை உற்சாகப்படுத்தப் போவதாகவும் மேற்குவங்க பாஜக தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநில இடைத்தேர்தல்களிலும் பிஹாரிலும் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் பாஜக அடுத்து வரும் தேர்தல்களை சந்திக்க மும்முரமாக செயல்பட்டுவருகிறது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பாஜக மாநிலத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் புதன்கிழமை கூறியதாவது:

பாஜகவின் இருமூத்த தலைவர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக இனி ஒவ்வொரு மாதமும் தனித் தனியாக மேற்கு வங்கத்திற்கு வருகை தருவார்கள். அவர்கள் இருவரும் கட்சிஅமைப்பு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வார்கள். தேதிகள் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை.

அமித் ஷா ஒருமாதத்திற்கு தொடர்ச்சியாக இருதினங்களும், நட்டா மூன்று தினங்களும் சட்டப்பேரவை தேர்தல் முடியும்வரை மாநிலத்திற்கு வருகை தருவார்கள். அவர்களின் தொடர்ச்சியான வருகைகள் கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்தும்.

காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் ஆகிய இருகட்சிகளும் நீண்ட காலமாக மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், சிபிஎம் மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு வாய்ப்புகளை மேற்குவங்க மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் மூன்று கட்சிகளும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆட்சியைவழங்க தவறிவிட்டன, அவை இப்போது பாஜகவால் நிறைவேறும்.

இவ்வாறு திலீப் கோஷ் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...