”இந்தியாவின் கச்சாஎண்ணெய் சுத்திகரிப்புதிறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரிக்கும்,” என, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
குஜராத்தில், முதல்வர் விஜய்ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.காந்திநகரில் உள்ள பண்டிட் தீன் தயாள் பெட்ரோலியம் பல்கலையின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்புவிழா நேற்று நடந்தது.நடவடிக்கை விழாவில், ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, தற்போது மாற்றத்தை நோக்கிசெல்கிறது. கொரோனா பரவல் காலத்தில் பட்டம் பெற்றுள்ள நீங்கள், எரிசக்திதுறையில் காலடி வைக்கப் போகிறீர்கள். எரிசக்தி துறையில் பலவாய்ப்புகள் குவிந்துள்ளன. இந்த, 10 ஆண்டுகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்படஉள்ளன. அதனால், ஆராய்ச்சி முதல் தயாரிப்புவரை, எரிசக்திதுறையில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கார்பன் வெளியேற்றத்தை, 35 சதவீதம் குறைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், நாம் முன்னேறி வருகிறோம்.
இந்த, 10 ஆண்டு காலத்தில், எரிசக்தி தேவைகளுக்கு, இயற்கை எரிவாயு பயன் பாட்டை, நான்கு மடங்கு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், நம் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இருமடங்காக அதிகரிக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.’சுயசார்பு இந்தியா’ இயக்கத்துக்கான போர்வீரர்களாக, மாணவர்கள் இருக்க வேண்டும். எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் பொறுப்பு, மாணவர்களிடம் உள்ளது.தட்டுப்பாடுநம் நாடு, 2022ம் ஆண்டில், 75 வது சுதந்திரதினத்தையும், 2047ல், 100 வது சுதந்திர தினத்தையும் கொண்டாட உள்ளது.
இந்த, 25 ஆண்டுகள்தான், உங்களுக்கு கிடைத்த பொற்காலம். குஜராத் முதல்வராக நான் பொறுப்பேற்றபோது, மாநிலத்தில், மின்தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. வீட்டுக்கும், விவசாயத்துக்கும் என, மின்சாரத்தை தனியாகபிரித்து வினியோகிக்க நடவடிக்கை எடுத்தேன். இதனால், 24 மணிநேரமும், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவது சாத்தியமாயிற்று.முன்பிருந்த செயல்பாடுகளையே பின்பற்றியிருந்தால், 24 மணி நேரமும், மின்சாரம் வழங்கியிருக்க முடியாது.
மேலும், மின்சாரத்தை, யூனிட், 13 ரூபாய்க்கு மாநிலஅரசு வாங்கிக் கொண்டிருந்தது. இதை மாற்ற வேண்டும் என நினைத்து, சூரியமின்சக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது குஜராத், மின்சாரத்தில் தன்னிறைவுபெற்ற மாநிலமாக உள்ளது. நான் முதல்வராக இருந்தபோது தான், பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.இதை பெட்ரோலிய பல்கலை என அழைப்பதை விட, எரிசக்திபல்கலை என, அழைப்பது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |