புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் பிஜேபி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிஜேபி யின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டதுடன் வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்து விளக்கி கூறி பேசினார்.

பின்னர் முருகன் செய்தியாளர்களை சந்தித்துகூறியதாவது, “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதியதொழில்நுட்பம் இரட்டிப்பு மகசூல் போன்ற நன்மைகள் இந்தசட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால் பி.ஜே.பிக்கு விவசாயிகள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்த நல்லபெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திமுக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. எல்லாமே அரசியலுக்காக செய்யப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

வரும் சட்டமன்றதேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடரும். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது? யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பிஜேபி யின் தேசியதலைமைதான் முடிவுசெய்யும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக நானும் அவரைசந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூடியவிரைவில் பி.ஜே.பியின் தேசியதலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும்.

எனது தலைமையிலான வேல்யாத்திரையை தமிழக அரசு தடுத்தது என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால் வேல்யாத்திரை மூலம் எங்களுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. வேல்யாத்திரை மூலம் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நாங்கள் இதுவரை 20 மாவட்டங்களில் தேர்தல்பரப்புரையை முடித்து விட்டோம். விவசாயிகளை சந்தித்து 1,000 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். மத்திய அரசு நல்லது செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பதே கமல்ஹாசனின் எண்ணம்” என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...