பிரதமர் நரேந்திர மோடி, சேவையில் டிரைவர் இல்லாமல் தானாகவேஇயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கிவைத்தார். ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில்சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்த பட்டுள்ளது.
அப்போது உரையாற்றிய பிரதமர் (PM Narendra Modi) , 2025 ஆம் ஆண்டிற்குள் 25 நகரங்களுக்கு மெட்ரோ ரயில்சேவை நீட்டிக்கப்படும் என்றார். மேலும், ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா மிகவேகமாக முன்னேறுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது என குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்சேவை இருந்ததாக குறிப்பிட்ட அவர், மத்திர அரசு தொடர்ந்து பல்வேறு நகரங்களில் மெட்ரோசேவையை தொடக்கியது என்றார்.
தில்லியில் 37 கி.மீ. தூரம்கொண்ட மெஜந்தா நிறலைன் வழித்தடத்தில் ஜனக்புரி முதல் பொட்டானிகள் கார்டன் நிலையம் வரையிலும், இந்த டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் மெட்ரோசேவை (Delhi Metro) அறிமுகப்படுத்த பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி காணொளிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், , 57 கி.மீ நீளமுள்ள பிங்க் நிறலைன் வழித்தடத்தி, மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வரையிலும். இந்த டிரைவர் இல்லாமல் இயங்கும் தனியங்கிசேவை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில் கார்பரேஷன் (DMRC) தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயன்படுத்த கூடிய தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த கார்டை வைத்திருப்பவர்கள், மெட்ரோ ரயில் மட்டுமல்லாது விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ்சேவை, பஸ் சேவை, பார்க்கிங் கட்டணம் செலுத்துதல், ஷாப்பிங் செய்தல் என அனைத்து வகையிலும் பயன்படுத்த முடியும்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |