தமிழகத்தில் பாஜக எழுச்சிபெறுவது திமுகவுக்கு பிடிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக எழுச்சிபெற்று வருவது திமுகவுக்கு பிடிக்கவில்லை. கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னணியில் திமுக உள்ளது. விவசாயிகள் பிரச்சினை, கல்வி, கடவுள்வழிபாடு என எல்லா விஷயங்களிலும் திமுக இரட்டை வேடம்போடுகிறது.
மத்திய அரசின் திட்டங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் சென்றுசேர்வதால், இடைத்தரகர்களுக்கு வேலைஇல்லை. விவசாயிதான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம்செய்ய வேண்டும். அதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதை மறைத்து இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாடம்புகட்ட வேண்டும் என்றார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |