திரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை, திசையும் இல்லை.

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளது துரதிஷ்டவசமானது எனினும் அவரது ராஜினாமா கட்சியைபாதிக்காது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

மேற்குவங்க மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான லஷ்மிரத்தன் சுக்லா நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.  சட்டப்பேரவை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் அங்கு அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க  பாஜக கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. திரிணமூலிலிருந்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

இதனிடையே சுக்லா வரவேற்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது. கட்சியில் சேரவும் அழைப்புவிடுத்துள்ளது.

சுக்லா ராஜினா குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”சுக்லா பாஜகவில் சேரவிரும்பினால், அவரை நாங்கள் வரவேற்கிறோம். திரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை, திசையும் இல்லை. இது சிபிஐ எதிர்ப்பு (எம்) என்ற புள்ளியிலிருந்து உருவானகட்சி திரிணமூல். அது இப்போது பொருந்தாது. டி.எம்.சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை அடிமட்டத்தில் உள்ளவர்களும் அறிவார்கள். அக்கட்சியின் ஆயுள் இன்னும் கொஞ்சகாலம்தான்.”

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பாபுல்சுப்ரியோ ”சுக்லாவை டி.எம்.சியை விட்டுவெளியேறி பாஜகவில் சேரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடினமான காலக்கட்டத்திலும் இந் ...

கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...