திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம்

சட்டசபை தேர்தலில் திமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்போம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., சார்பில் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற அணிபிரிவு மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றுவருகின்றன. வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அரியணையில் அமர்த்த பா.ஜ., மிகப் பெரிய அளவில் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. அதிகளவிலான பா.ஜ., வேட்பாளர்கள் சட்டசபை உறுப்பினராக வெற்றிபெறுவார்கள்.

ஸ்டாலின் போன்ற எதிர்க் கட்சியினர் பா.ஜ.,வின் வெற்றிவேல் யாத்திரையை குறை கூறினார்கள். வேல் எடுத்து அரசியல் செய்கிறார் என கிண்டல் செய்தனர். ஆனால் இன்று தை கிருத்திகை நாளில் பாஜக ., எங்கு வேல் எடுத்ததோ அதே இடத்தில் கையில் வேல் எடுக்கவைத்துள்ளார் முருக கடவுள். கோவிலுக்கு போகமாட்டோம் என சொன்னவர்களிடம் ஒரேமாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம். திமுக.,வை வரும் இந்த சட்டசபை தேர்தலில் அரசியலைவிட்டே விரட்டியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...