நாராயணசாமி அரசு தப்புமா

டெல்லிக்கு அவசரமாகசென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்து விட்டு பாஜக தலைவர்கள் புதுச்சேரி திரும்பியுள்ளனர். பெரும்பான்மை இல்லாத நாராயணசாமி அரசு தப்புமா என்றகேள்வி அதிகரித்துள்ளது.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள்பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் புதுவை சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 10 ஆகவும், அரசை ஆதரிக்கும் திமுக 3, சுயேச்சை ஒருவர் என 14 எம்.எல்.ஏ.,க்கள் பலம் மட்டுமே உள்ளது. எதிர்க் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பா.ஜனதா 3 என 14 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. சபாநாயகருடன் சேர்த்து ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சமபலம் உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்கள் 28 பேர் உள்ளனர். இதில், 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால்தான் ‘மெஜாரிட்டி’ கிடைக்கும். ஆளும்காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

நாராயணசாமி தார்மீக அடிப்படையில் முதல்வர்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதோடு, ஆளுநர் மாளிகையில், நாராயணசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மனுவும் அளித்துள்ளனர். இந்தமனு மீது புதிதாக பதவியேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை (பொறுப்பு) சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் 2 பேர் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார். ஆனால், எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கையெழுத்திட்டு ஆளுநர் மாளிகையில் மனுகொடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை உள்ளது என தீர்ப்பில் கூறியுள்ளது. இதனால் நாராயண சாமி அரசு தப்புமா என கேள்வி பலமாக எழுந்துள்ளது.

விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் டெல்லிக்கு வர நேற்று (பிப். 17) திடீர் அழைப்பு வந்தது. அவர்கள் நேற்று உடனடியாக டெல்லிசென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்தனர். அப்பயணத்தை முடித்துவிட்டு இன்று (பிப். 18) புதுச்சேரி திரும்பினர்.

திடீர் அவசரபயணம் பற்றி மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி அரசியல்சூழல் பற்றி பேசினோம். முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரியில் நிலவும் அசாதாரணமான சூழலுக்கு ஏற்பட அரசியல்வியூகம் வகுக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் அளித்த மனுமீது துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, மேலும் விசாரித்த போது, “குறிப்பிட்ட காலக்கெடு அளித்து சட்டப் பேரவையைக் கூட்டி அதில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட உள்ளார். இதன்பின், சபாநாயகர் சட்டப்பேரவை கூடும்தேதி, நேரத்தையும் முடிவுசெய்து அறிவிப்பார்” என்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...