மார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு? பிரதமர் நரேந்திரமோடி சூசகம்

அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி 3,222 கோடியில் உருவாக்கபட்டுள்ள பெட்ரோலிய திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்ததுடன் இரண்டுபொறியியல் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உஜ்வாலா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் எரி வாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பெருமிதம்தெரிவித்தார்.

2016-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மார்ச் 4ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும் தற்போது மார்ச் 7-ம்தேதி தேர்தல்தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் பிரதமர் சூசகமாகத் தெரிவித்தார். அதற்கு முன்னதாக அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு முடிந்தளவுக்கு அதிகபட்சமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தின்கீழ் நோபரா – தட்சிணேஸ்வரம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசியவர், மேற்குவங்க மாநில மக்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் அநீதி இழைத்துவருவதாகவும், மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டதாகவும் கூறினார்.

வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவந்து இளைஞர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என மோடி உறுதிபடக்கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...