தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் அதிமுக பாஜக, பாமக உள்ளிட்டகட்சிகளுடன் தங்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். அதிமுக – பாஜ கூட்டணிக்கு ஆதரவாக பல்வேறு பாஜக தலைவர்களும் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரத்தில் பேசிய உள் துறை அமித் ஷா, “நாட்டின் பழமையான மற்றும் தொன்மையான தமிழ்மொழியில் பேசமுடியாதது வருத்தும் அளிக்கிறது. இதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று தனது பேச்சை தொடங்கினார்.
அப்போது அமித் ஷா பேசுகையில், “அதிமுக – பாஜக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. ஏழை எளியமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்தகூட்டணி உழைக்கும். மறுபுறம், உள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. ராகுலை பிரதமர் ஆக்குவது குறித்து சோனியா, உதயநிதியை முதல்வராக்குவது குறித்து ஸ்டாலினும் சிந்தித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி ரூ .12 லட்சம்கோடி ஊழலில் ஈடுபட்டது, அப்போது திமுகவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. இன்று தமிழகத்தில் 2ஜி, 3ஜி & 4ஜி ஆகிய மூன்றும் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் 2 தலைமுறைகள், 3ஜி என்றால் கருணாநிதியின் குடும்பத்தின் 3 தலைமுறைகள். 4 ஜி என்றால் சோனியாகுடும்பத்தின் 4 தலைமுறைகள்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
2022ஆம் ஆண்டிற்குள் குடிசைஇல்லாத இந்தியாவைப் படைக்கவேண்டும் என தெரிவித்த அவர், கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடுஇல்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு அதனைச் செய்துள்ளது என்றார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |