தேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்!

தேர்வு பயத்தைபோக்கும் நிகழ்ச்சியில், பாரத பிரதமருடன் கலந்துரையாட, பள்ளி மாணவர்கள் வரும் 14ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு, எதிர்கால லட்சியபாதையில் மாணவர்கள் பயணிக்க, தன்னம்பிக்கை அளிக்கும்வகையில், பரீட்சைக்கு பயமேன் (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். நடப்பாண்டிற்கான இந்நிகழ்ச்சி, கொரோனா காரணமாக, மார்ச் இறுதியில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் இக்கலந்துரையாடலில், நடப்பாண்டு பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.

இதற்கு, www.innovate india.mygov.in/ppe2021 என்ற இணையதள முகவரியில், வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேசியகல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.இதில் வெற்றிபெறுவோர், தங்களுக்கான கேள்விகளை, 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவுசெய்தால், பிரதமர் பதிலளிப்பார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போதுவரை, 4 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒருலட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இணையதளம் வாயிலாக பதிவுசெய்யலாம் என, பள்ளிகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...