10 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களுடன் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்த எல்.முருகன்

தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் திருவிழா களைக் கட்டியுள்ளது. அரசியல்கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியபணிகளை எல்லாம் முடித்துகொண்டு, தற்போது தேர்தல்களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். அதிமுகவுடனான பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிய உள்ளதையடுத்து நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தாராபுரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம்வரை சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல்நடத்தும் அதிகாரி பவன்குமாரிடம் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் இதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சி.மகேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

தன்னுடைய டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக தொண்டர்களிடம் இருந்து பெற்ற 5, 2 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்.முருகன் வசூலித்து வைத்திருந்தார். அதனை தேர்தல்நடத்தும் அதிகாரிமுன்பு எண்ணி காண்பித்து, சரியாக 5 ஆயிரம் ரூபாய் இருப்பதை உறுதிசெய்த பிறகே செலுத்தினார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக பழனிமுருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...