சித்தர்கள் என்பவர்கள் மனம் புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக் காரணங்கஈளை புறம்பே உலக வாஞ்சையில் டுபட ஒட்டாது தன்னுளே நிலை நிறுத்தி 96 தத்துவ விடயங்களை சுட்டு நீறாக்கி இவ்வுலகு உய்யும் வண்ணம் தன்னைப் பரம் பொருளோடு இரண்டறக் கலப்பித்து சாயுச்சிய பதவியை அடைந்து நிற்க தாமரை இலைத் தண்ணீர்
போலும், புளியம் பழமும் தோடும் போலவும் ஜீவ சமாதியை அடையப் பெற்றவர்களேயாவார்கள்.
இவர்களுக்கு கால வரைமுறை என்பது கிடையாது எப்போது வாழ்ந்தார்கள்,எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்ற ஆராய்ச் சிக்கு நாம் உட்படுவோமேயானால் நிச்சயம் தோல்வியே கிட்டும்.
ஆனால் போகர்7000 லும், அகத்திய மகா முனிவர் 12000லும் ஒரு சில சித்தர்களுக்கு மட்டும் வயது வரம்பு,குலம்,மாதம் நட்சத்திரம் போன்ற விபரங்கள் காணக் கிடக்கின்றன.
இவர்கள் 48 சித்தர்கள் எனவும்,18சித்தர்கள் எனவும், 9 சித்தர்கள்(நவ) எனவும், சப்தரி~pகளாகிய 7 சித்தர்கள் என்றும் இன்னும் சில நூற்களில் நவகோடிச் சித்தர்கள் எனவும் பலவாறாகக் கூறப்படு கிறது.
இவர்களது நூலைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமே யானால் இறைவனால் உண்டு பண்ணப்பட்டுள்ள அண்டசம்–முட்டையில் தோன்றுவன,சுவேதசம்–வியர்வையில் தோன்றுவன,உற்பீசம்–விதை வித்துக்களில் தோன்றுவன,பையசம்–கருப்பையில் தோன்றுவனவாகிய நான்கு விதமான யோனிகளின் வழிச் சிரு~;டிக்கப்பட்டுள்ள 84நூறு ஆயிரம் கோடி ஜீவ பேதங்களும் இத்தகையன என்றும்,சப்த பிறப்புகளாகிய நீர் வாழ்வன, ஊர்வன, தவழ்வன பறப்பன நடப்பனவாகிய தேவர் முதல் புற்ப+ண்டு வரை ஒரறிவு முதல் 7வது அறிவு வரை சகல சரஅசர வஸ்து களையும் பிரித்து எடுத்து அதன் குணம் செயல் முதலிய யாவற்றையும் மனித வாழ்வுக்கு உபயோகப்படும் படிச் சொல்லி வைத்தருளி இருக் கின்றனர்.
அட்டாங்க யோக நெறிமுறைகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிறாணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம் சமாதி முதலியவற்றின் வழியே நடத்திச் சென்று வாத வைத்திய யோக ஞானங்களையும் இன்னும் சல்லியம், ஒட்டியம், தொட்டியம், தொட்டவுடன் நசிந்து போகும் சித்து நொடியான், ஒடியான், கிருகரணை, எட்டாரம், ல~ம் சித்து,கலக வித்தை, கக்கிசம், பஞ்சபட்சி,சீன வித்தை, வினோதா ரூடம்,துண்டு துண்டாக வெட்டும் ஜாலம், செப்பிடு வித்தை, பேதனம், எக்~ணி, தர்க்க சாஸ்திரம்,ப~;ணி, தக்~ணி,வாதம், ஜோதிடம், நாடி, காவியம், வைத்தியம்,இலக்கணம்,சூடாமணி, சித்தர் ஆருடம், கன்னம், சிமிழ் வித்தை, கம்பி சூஸ்திரம், சூனியம், திறவுகோல், நடுக்கு சல்லியம், மதன நூல், சிற்பம், போர்வித்தை, பெருநூல்சல்லியம், இருப்பு க்கடலை ,மலைநிகண்டு , சித்த சுத்தி, அஞ்சல்,மந்திரம், அஸ்திரப் பயிற்சி, கருக் கூட்டு, சலமாட்ட நிகண்டு,மலை வளம்,ப+ர்வகாண்டம்,கலைக்ஞானம்,ரேகை வித்தை, வர்மம்,ரசமணி,ஆகமங் கள்,விஸ்வாமித்ரம் மற்றும் பிற நூல்களும் நமக்காகச் சொல்லி உள்ள னர்.
Tags; சித்தர்கள் ,என்பவர்கள், மனம் , புத்தி, அகங்காரம் , சித்தர் வரலாறு
நன்றி சிவநாதன்
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.