தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம், தமிழகமக்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சட்டப் பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல்மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பாஜக மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை பாஜக அரசியல் கட்சி மட்டுமல்ல மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவைசெய்கிற அமைப்பும் ஆகும்.

நான் மாநிலத்தலைவராக பொறுப்பேற்றபோது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப் பட்டிருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிகொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப் பேரவையை அலங்கரிப் பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

1996ல் ஒருசட்டப்பேரவை உறுப்பினரும் அதன்பிறகு 2001ல் நான்கு சட்டப்பேரவை உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு சட்டப் பேரவை உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் M.R. காந்தி, பாஜக அகிலபாரத மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் C.சரஸ்வதி, ஆகியோர் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன் படும்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரங்கள் மேற்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, அகில பாரத தலைவர் J.P.நட்டா , உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ராஜ்நாத்சிங், ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலைவர்களுக்கும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனி சாமி மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாஜக, அதிமுக, பாமக, தமாக உள்பட தேசியஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...