சிறப்பான சுற்றுச் சூழலுக்காக உயிரி எரிபொருள்களின் ஊக்குவிப்பு

உலக சுற்றுச்சூழல் தினநிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளார். எத்தனால் கலப்புக்கான எதிர்காலதிட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை’-யை நிகழ்ச்சியின் போது பிரதமர் வெளியிடுகிறார்.

‘சிறப்பான சுற்றுச் சூழலுக்காக உயிரி எரிபொருள்களின் ஊக்குவிப்பு’ என்பது இந்தாண்டு நிகழ்ச்சியின் மையக் கருவாக இருக்கும்.

‘இந்தியாவில் எத்தனால் கலப்புக்கான எதிர் கால திட்டம் குறித்த நிபுணர்குழுவின் அறிக்கை’-யை நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிடுவார். உலக சுற்றுச்சூழல் தினத்தை குறிக்கும் வகையில், 2021 ஏப்ரல் 1-ல் இருந்து பெட்ரோலில் 20 சதவீதம்வரை எத்தனாலை கலந்து விற்குமாறு எண்ணெய் நிறுவனங்களை அறிவுறுத்தும் ஈ-20 அறிவிப்பையும், உயர்ரக எத்தனால் கலப்புகளான ஈ12 மற்றும் ஈ15-க்கான பிஐஎஸ் விவரக் குறிப்புகளையும் இந்திய அரசு வெளியிடுகிறது.

இந்தமுயற்சிகளின் மூலம் கூடுதல் எத்தனால் வடிகட்டல் வசதிகள் நிறுவப்படுவதோடு, கலப்பு எரிபொருளை நாடுமுழுவதும் கிடைக்க செய்வதற்கான கால அளவுகளும் வழங்கப்படும். இதனால் எத்தனால் உற்பத்திசெய்யும் மாநிலங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் 2025-க்கு முன்பாக எத்தனால் பயன்பாடு அதிகரிக்கும்.

புனேவில் மூன்று இடங்களில் ஈ100 மையங்களுக்கான சோதனை திட்டத்தையும் பிரதமர் துவக்கிவைக்கிறார். எத்தனால் கலந்தபெட்ரோல் மற்றும் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு திட்டங்களை செயல் படுத்துபவர்களாக விளங்கும் விவசாயிகளின் அனுபவம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களுடன் பிரதமர் உரையாடுவார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...