சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கை

சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் கவனம் செலுத்தவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

.ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில், கடந்த 2016ம் ஆண்டுமுதல், தொழில் முனைவோர்களுக்காக, ‘விவா டெக்’ என்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசினார்.

அதில் அவர் கூறியதாவது:கடந்த ஒர் ஆண்டு காலமாக, கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதனால், நாம் பல்வேறு துறைகளில், பல இடையூறுகளை கண்டுள்ளோம். இதனால் நாம் விரக்திஅடைய வேண்டியதில்லை. பதிலாக, நாம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டு இதேநேரத்தில், உலகமே கொரோனாவுக்கான தடுப்பூசியை தேடியது.

ஆனால், தற்போது இந்தியாவில், இரண்டுதடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பல தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்குவரும்.எதிர்கால சவால்களை கருத்தில்கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். முதலீட்டாளர்களுக்காக மாறுபட்ட மற்றும் விரிவானசந்தை காத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுதும் உள்ள கொரோனா முன்கள பணியாளர்களின் பணிதிறனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப ஆறுவிதமான குறுகியகால பயிற்சியினை, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

இந்தபயிற்சி வகுப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாளை துவக்கிவைக்கிறார்.மருத்துவ துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலதேவையை கருத்தில் வைத்து, மருத்துவதுறை சாராத திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு இந்தபயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நாடுமுழுதும் உள்ள, 26 மாநிலங்களில், 111 பயிற்சி மையங்களில், இந்தபயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக, 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மற்றும் கல்யாணி மாவட்டங்களில், 250 படுக்கை வசதிகள் உடைய, கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க, ‘பிஎம்கேர்ஸ்’ அறக்கட்டளை நிதியில் இருந்து, 41.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தபணிகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...