இவர்களுக்கு புதிய வார்த்தைகளை தான் நாம் தேட வேண்டும்

கோவில்பட்டியில் தினமும் நண்பர்கள் சந்தித்து பேசும் படித்துறை ஒன்றுண்டு.

நேற்று நான் படித்துறையின் மேல் உட்கார்ந் திருந்தேன்.

எனக்கு நேர் எதிரே கீழ்ப்படியில் ஐந்தாறு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து செல்போனில் ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் நேராகமேலே அமர்ந்திருந்ததால் எனக்கும் அப்படம் தெளிவாகத் தெரிந்தது.

நான் ஏற்கனவே அந்த வீடியோவை பார்த்திருக்கிறேன்.

தலீபான்கள் மாதிரி உடையணிந்த மூன்று பேர் ஒருவரை இழுத்து வருகிறார்கள்.

இழுத்து வரப்படுபவரும் அதேமாதிரி உடைதான் அணிந்திருக்கிறார்.

தரையில் கிடக்கும் மரக்கட்டையில் அவருடைய கையை அமுக்கி வைக்க ஒருவன் ஒரே வெட்டில் அதை துண்டிக்கிறான்.

துண்டிக்கப்பட்ட மணிக்கை ஐந்து விரல்களுடன் வாழைப்பூவைப் போல் தரையில் துடிக்கிறது.

அத்தோடு விடாமல் அவரை இழுத்துக் கொண்டு போய் கொதிக்கிற வெண்ணீரில் அந்த ரத்தம் சொட்டும் மொட்டைக் கையை அமுக்குகிறார்கள்.

பார்க்கிற யாருக்கும் ஈரக்குலை பதைபதைக்கும் காட்சி.இதைப் பார்த்த மாணவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் காட்டுமிராண்டிகள்,ஆதிவாசிகள் என்று.

உடனே நான் சொன்னேன் தம்பிகளே தயவு செய்து அவர்களை அப்படி சொல்லாதீர்கள் என்றேன்.

ஒரே நேரத்தில் என்னை திரும்பி பார்த்த மாணவர்கள் இதைப் பாருங்க தாத்தா காட்டுமிராண்டிகளிலும் சுத்த காட்டு மிராண்டிகள் என்றார்கள்.

நான் எழுந்து ஒருபடி கீழிறங்கி அவர்களுடன் உட்கார்ந்தேன்.
“காட்டு மிராண்டிகள் ஆதிவாசிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?அவர்கள் என்றைக்காவது இப்படி கையை துண்டித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
என்றுகேட்டேன்.

அனைவரும் என்னையேஉற்றுப் பார்த்தார்கள்.
“தான் ஒரு மரத்தின் கிளையை வெட்டும் போதும் ஒரு செடியை பிடுங்கும் போதும் அந்த மரத்திடமும் செடியிடமும் மன்னிப்புக் கேட்ட பின்பே மரக்கிளையை வெட்டும் செடியைப் பிடுங்கும் ஆதிவாசிகளை நீங்கள் பார்த்ததுண்டா?

வனங்களில் வசிக்கும் ஆதிவாசிகளை வெளியேற்ற அரசு ராணுவத்தையும் போலீசையும் அனுப்பும் போது ஒவ்வொரு ஆதிவாசிகள் பெண்ணும் ஆணும் ஆளுக்கொரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்.

ஏன் மரத்தை கட்டிப் பிடிக்கிறீர்கள் உங்களை வெளியேற்ற வரும் ராணுவ வீரர்களை காவலர்களை கட்டிப்பிடிக்க வேண்டியதுதானே என்று கேட்டால் அவர்களின் பதில் என்ன தெரியுமா
“நாங்கள் இதயம் உள்ளவர்களைத்தான் கட்டிப் பிடிப்போம்”இதுவும் காட்டுமிராண்டிகளின் பதில்தான்.

பழங்களை தின்று கொட்டைகளை மலை முழுக்க பரப்பி மரங்களை உருவாக்கும் வௌவால்களுக்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்தி வௌவால்களுக்கு நன்றி சொல்லி வழிபாடு நடத்தும் ஆதிவாசிகளை உங்களுக்கு தெரியுமா.

வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை கூறுபோட்டு பங்கு வைக்கும் போது கணவனை இழந்து வாழும் வேட்டைக்கு வர இயலாத விதவைகளுக்கு முதல் பங்கு மாமிசம் கொடுக்கும் அறவுணர்வுள்ள ஆதிவாசி காட்டுமிராண்டிகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரே மரத்தில் பாதிப் பழங்களை பறவைகளுக்கு பகிர்ந்து விட்டு மீதி பாதி மரத்து பழங்களை மட்டும் பறித்துண்ணும் ஆதி வாசிகளை பார்த்திருக்கிறீர்களா?
சினை’பெட்டை மிருகங்களை வேட்டையாடாமல் பருவமில்லாத குட்டிகளையும் கொல்லாமல் அறத்துடன் வாழும் காட்டுமிராண்டி ஆதிவாசிகளை நீங்கள் பார்த்ததுண்டா?

இன்னும் ஆதிவாசிகளைப் பற்றி ஏராளம் சொல்லலாம்.

ஆகவே கைகளை கால்களை தலையை வெட்டுபவர்களை தயவு செய்து காட்டுமிராண்டிகள் ஆதிவாசிகள் என்று தயவு செய்து சொல்லாதீர்கள் தம்பிகளே என்றேன்.

அப்படின்னா இவங்களை எப்படித்தான் சொல்றது?
இவர்களை குறிப்பிட தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை.

இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நீங்களும் முயற்சி செய்யுங்கள் தம்பிகளே என்றேன்.

அப்புறம் என்னை யாரென்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் பதிவு

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...