யமதர்மராஜன் என்ற பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுவர் . ஆனால் உண்மையில் யமதர்மராஜா ; மிகவும் நல்லவர் . தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமையை பிழை இன்றி செய்ய நினைப்பவர் . மேலும் தர்மத்தை நிலை நாட்டுபவர் . பலராலும் அவர் ஒரு பயங்கரமானவராகவே பார்கப்படுகின்றார் . அவர் சூரியனுடைய பிள்ளை என்றும் பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரர் யமதர்மரின் பிள்ளை என்ற கதைகளும் உண்டு.
உபனிஷத்துக்களில் மிகவும் பிரபலமான கதா உபனிஷத் என்ற புத்தகத்தில் யமதர்மராஜரைப் பற்றி கூறப்பட்டுள்ள கதையின்படி, ஒருமுறை நடந்தேறிய ஒரு யாக பலிக்கு ஒரு பிராமணர் தன்னுடைய உடல் நலமற்ற பசுக்களை தானம் செய்தார் . அந்த பசுக்களின் நிலையைக் கண்டு கண்டு மனம் வருந்திய அவருடைய மகன் நாசிகேதா என்பவர் அந்தப் பசுக்களுக்குப் பதிலாக தன்னை தருமாறு வேண்டினார். அதன்படி யமனிடம் நாசிகேடா அனுப்பப்பட்டார் . மூன்று நாட்கள் யமதர்மராஜாருடைய இருப்பிடத்தில் காத்து நின்று தன்னை அர்பணித்தவருக்கு அவர் கேட்கும் சந்தேகங்களை யமதர்மராஜா ஒரு ஆசிரியராக இருந்து விளக்குவதாகவும் , அதைக் கேட்டு தெளிவு பெற்ற நச்சிக்கேடா மோட்சம் அடைவதாகவும் கதை உள்ளது.
எப்படி யதர்மராஜர்; ஒருவனுடைய தவறுகளைப் புரிய வைத்து நியாயமாக தண்டனை தந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இன்னொரு கிரhமியக் கதை இது. ஒரு முறை யமதர்மராஜர் தன் இருப்பிடத்தில் இல்லாத பொழுது அங்கு அனுப்பப்பட்ட இறந்து விட்ட வண்ணான் , யமதர்மராஜின்; தங்க ஆசனம் காலியாகக் கிடக்க அதில் சென்று அமர்ந்து கொண்டான் . அதில் அமர்ந்து இருந்த பொழுது பூமியில் ஒருவன் தன்னுடைய சட்டையில் இருந்த பணத்தைத் திருடுவது போன்ற காட்சியை கண்டு ஆத்திரம் கொண்டு அவன் மீது தங்க ஆசனத்தை வீசி எறிந்து விட்டான்.
யமதர்மராஜர் திரும்பி வந்து தங்க ஆசனம் காணாமல் போனதைக் கண்டார் . பின்னர் சித்திரகுப்தர் மூலம் நடந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட பின் அந்த வண்ணாணிடம் அவன் பூமியில் இருந்த பொழுது அவனிடம் சலவை செய்ய வந்த சட்டை பைகளில் இருந்த பணங்களை வண்ணானாக இருந்த பொழுது எப்படியெல்லாம் திருடினான் என்பதை நினைவு கூறி அப்பொழுதெல்லாம் ஆசனங்களை வீசி எறிந்திருந்தால் எத்தனை ஆசனங்களை அவன் எறிந்திருக்க வேண்டி இருந்திருக்கும் எனப் பட்டியல் போட்டுக் காட்டி அவனை நரகத்திற்கு அனுப்பினார் .
அப்படிப்பட்ட அவருக்கு ஸ்ரீவான்சியத்தைத் தவிற வேறு இடங்களிலும் ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு முக்கியமான ஆலயம் கோயம்பத்தூரில் இருந்து திருச்சூர் , குருவாயூர் போகும் தடத்தில் பதினைந்து முதல் இருபது கிலோ மீட்டா தொலைவில் உள்ள வெள்ளளுர் என்ற கிராமத்தில் உள்ளது. அங்குள்ள சித்திரபுத்திர யமதர்மராஜர் ஆலயம் சுமார் 3 00 ஆண்டுகளுக்கு முன்பு ஆலய பண்டிதர் பழனிசாமி என்பவருடைய ஏழு தலைமுறைக்கு முந்தைய மூதையர் கட்டிய ஆலயம் எனக் கூறப்படுகின்றது.
இந்த ஆலயம் இருக்கும் இடம் முன்னொரு காலத்தில் அங்கு ஓடிக் கொண்டிருந்த நதி ஒன்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிய இருந்ததாம். ஆனால் அந்த அழிவை தடுத்து காப்பாற்றியது யமதர்மராஜர் எனவும் , அதை அந்த ஆலயத்தைக் கட்டியவர் கனவில் யமராஜர் தோன்றி தனக்கு அந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறும் கூறினாராம்
. யமராஜர் தன் கனவில் தோன்றி அந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறும் கூறியதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போனவர் , தன் கனவில் கண்ட இடத்தை அடைந்த பொழுதுதான் தெரிந்ததாம் அது ஒரு பிராமணருடைய பயிர் நிலம் என. அது மட்டும் அல்ல ஆச்சரியமாக அதே இடத்தில் அந்த இடத்தின் சொந்தக்காரரும் அவர் சென்ற பொழுது வயலைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார் . சற்றும் தயங்காமல் அவரிடம் சென்று தன் கனவு குறித்துக் கூறிய பின் தான் அந்த இடத்தில் யமனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப நினைத்திருப்பதாகக் கூற, அந்த பிராமணரும் இந்த இடத்தில் எத்தனை அளவு இடம் வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு ஆலயத்தைக் கட்டுமாறு கூறி விட்டார் . அவ்வளவுதான் , அடுத்தடுத்து காரியம் நடைபெற்று கரும்புத் தோட்டத்தின் நடுவே சிறிய பாதை மூலம் செல்லும் வகையில் ஆலயம் எழுந்தது.
ஆலயத்தில் முதலில் வணங்க வேண்டியது காவலில் உள்ள யமதர்மராஜரின் கணக்கரான சித்திர குப்தரின் தங்கை ஆண்டிச்சி அம்மனைத்தான் . அடுத்து பாம்புகளுடன் காணப்படும் வினாயகர் . அவரைத் தாண்டிச் சென்றால் யமதர்மராஜர் சித்திர குப்தருடன் உள்ள காட்சி. ஒரு கையில் அங்குசம் ஏந்தி பயங்கரத் தோற்றத்தில் யமதர்மராஜா ; தெற்குப் பக்கமாக பார்த்தபடி தன்னுடைய எருமை வாகனத்தில் அமர்ந்து இருக்கின்றார் . பெண்கள் வினாயகரை தாண்டி செல்லக் கூடாது, ஆனால் ஆண்கள் சன்னதிக்கு சென்று யமதர்மராஜரை வணங்கலாம் . ஆலயத்தை நிர்வாகிப்பது தேவர் பிரிவினர் . யமதர்மராஜருக்கு அங்கு எலுமிச்சை, உடைக்காத தேங்காய் , போன்றவற்றை வெற்றிலைப் பாக்கு சகிதம் படைக்கின்றனர். கோயம்பத்தூர் சென்றால் அவசியம் காண வேண்டியது வெள்ளளுர் யமதர்மராஜர் ஆலயம் .
நன்றி சாந்திப்பிரியா
You must be logged in to post a comment.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
3coppice