திருமூலர்

திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமான் மற்றும் நந்தீசரிடம் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் தெரிந்தவர். திருமூலருக்கு அகத்தியர் மீது அதிக அன்பு மற்றும் மரியாதை உண்டு, எனவே அகத்தியரை சந்தித்து சிலகாலம் அவருடன் தங்குவதற்கு விரும்பினார், தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை நோக்கிச் சென்றார்.

போகும் வழியில் பசுபதி, திக்கேதாரம்,  காசி, நேபாளம் , விந்தமலை, த்ருவாலங்காடு, திருப்பருப்பதம், திருக்காளத்தி, காஞ்சி ஆகிய திரு-தலங்களை தரிசித்து ஆங்கே இருந்த சிவயோகிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்தார்,

தில்லையில் இறைவனின் அற்புத திருக்கூத்தாடியருளும் திருநடனத்தை கண்டு மகிழ்ந்தார், திருவாவடுதுறையில் இறைவனை வழிபட்டு சென்றபோது  காவிரி கரையில் பசு கூட்டங்கள் கதறி அழுவதனை கண்டார்.

மூலன் என்பவர்  தினமும் அங்கு வந்து பசுக்களை மேய்ப்பார். அவர் தன் விதி முடிந்த காரணத்தினால் உயிர் நீங்கி இறந்து கிடந்தார். மூலன் இறந்ததை கண்ட பசுக்கள் அவரது உடம்பினை சுற்றி சுற்றி வந்து வருந்தி கதறி கண்ணீர் விட்டன.

பசுக்களின் துன்பம் கண்ட திருமூலர் அவற்றின் துயரை துடைக்க எண்ணினார்,   எனவே தன்னுடைய உடம்பை மறைவான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் (கூடு விட்டு கூடுபாய்தல்) என்னும் பவன முறையினால் தனது உயிரை மூலன் உடம்பினுள் புகுமாறு செலுத்தி திருமூலராய் எழுந்தார்.

மூலன் உயிருடன் எழுந்ததை கண்ட பசுக்கள் மகிழ்ந்தன  மூலனின் உடலினை மோந்து, நக்கி, களிப்போடு துள்ளி குதித்தன. மனம் மகிழ்ந்த திருமூலர் பசுக்களை மிகவும் நன்றாக மேய்த்தார். வயிரார மேய்ந்த அந்த பசுக்கள் தங்களது ஊரை நோக்கி நடந்தன.

அவற்றை பின் தொடர்ந்து சென்ற திருமூலர் பசுக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றதை கண்டு மகிழ்ந்தார். அப்பொழுது வீட்டில் இருந்து வெளியே வந்த மூலனினுடைய மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், மூலன் இறந்துவிட்டான் எனவும் கூறினார். இதை நம்பாத அவள் அவ்வூர் பெரியவர்களிடம் முறையிட்டால், திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலில் இருந்து விலகி தான் ஒரு சிவயோகியார் என்பதனை நிருபித்தார். பிறகு மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இதனை கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியை தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து விடைபெட்ற்ற திருமூலர் தனது உடலை தேடி சென்றார், அனால் எங்கு தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

மூலனின் உடம்பிலேயே தங்கி திருவாடுதுறை திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை-விளக்கும் ‘திருமந்திரம்’ என்ற நூலை ஓராண்டுக்கு ஒரு-பாடலாக மூவாயிரம் பாடல்களை பாடியருளினார்.  

திருமுலருக்கு 16 சீடர்கள் உண்டு, இவர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை  சித்தரும் குறிப்பிடத்தக்கவர்கள் . பாண்டிய மன்னன் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராக கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தனர்.

இவரது வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் பெரியபுராணத்தில் விரிவாக கூறியுள்ளார்,

Click – திருவாசகம் வீடியோ

திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000, திருமூலர் சோதிடம் – 300, திருமூலர் மாந்திரிகம் – 600 , திருமூலர் சிற்ப நூல் – 1000, திருமூலர் வைத்திய காவியம் – 1000, திருமூலர் வைத்திய கருக்கிடை – 600, திருமூலர் சல்லியம் – 1000, திருமூலர் வைத்திய சுருக்கம் – 200, திருமூலர் சூக்கும ஞானம் – 100, திருமூலர் பெருங்காவியம் – 1500, திருமூலர் தீட்சை விதி – 8, திருமூலர் தீட்சை விதி – 100, திருமூலர் கோர்வை விதி – 16, திருமூலர் பச்சை நூல் – 24, திருமூலர் ஆறாதாரம் – 64, திருமூலர் தீட்சை விதி – 18, திருமூலர் யோக ஞானம் – 16, திருமூலர் விதி நூல் – 24, திருமூலர் பெருநூல் – 3000

திருமூலர் பற்றிய வீடியோ செய்திகள்

{qtube vid:=x6sWbZQu2lM}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...