உ.பி.,யில் புதிதாக ஆட்சியமைக்க இருக்கும் சமாஜ்வாடி கட்சியால், மாநிலம் பின்னோக்கி சென்றுவிடுமாம் இதை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. மாநில முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார், மேலும் பின்னோக்கி செல்வதற்கு என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை .
மேலும் இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது ; தேர்தல் முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை தருவதாகவும் . 5 ஆண்டு கால ஆட்சியில், மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல நல்லதிட்டங்களை அமல்படுத்தினேன். எனது ஆட்சி காலத்தில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர்.
தற்போதைய புதிய அரசு, நான் கொண்டு வந்த நல திட்டங்களை முடக்க போகிறது. எனவே , மாநிலம் வளர்ச்சியில் பின்தங்க போகிறது என்று ஆருடம் கூறியுள்ளார் .
இன்னும் சீரழிவதற்கு என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை! மக்கள் தந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் மாநிலம் முழுதும் யானை மற்றும் தன்னுடைய சிலைகளால் நிரப்பியது, தனது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் ஏதோ திருவிழாவை போன்று கொண்டாடி பொது மக்களின் பணத்தை விரயம் செய்தது இதுதான் இவர் செய்த ஒரே சாதனை
அதேபோன்று முலாயம் சிங் ஒன்றும் மகானோ, கறை படியாத கைக்கு சொந்தக்காரரோ இல்லை . பீகார் எப்படி லல்லு குடும்பத்திடம் சிக்கி சீரழிந்ததோ , அதை போன்று உ.பி.யும் முலாயம் குடும்பத்திடமும் சிக்கி சின்னா பின்னமாகி இருக்கிறது. என்ன செய்ய? இந்தியாவின் தலையெழுத்து நேரு குடும்பத்திடம் சிக்கி இருப்பதை போன்று , இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் தலைவிதி அந்தந்த மாநிலங்களில்_இருக்கும் பெருச்சாளி கூட்டங்களிடம் சிக்கி சின்ன பின்னமாகி கொண்டிருக்கிறது.
சாதி அரசியல், படிபறிவின்மை, இலவசங்கள் போன்ற பிற்போக்கு சக்திகள், இந்திய அரசியலை பிடித்து ஆட்டுவது இந்தியாவை பிடித்த சாபம். கடந்த ஐந்தாண்டுகளாக மாயாவதியால் கொள்ளையடிக்கப்பட்ட உ.பி. இனி முலாயம் குடும்பத்தால் வேட்டையாடப்படும்.
உபி மக்களுக்கும் வேறுவாய்ப்பு இல்லாததால்,முலாம்க்கு அடித்திருக்கிறது யோகம் .இது காலத்தின் கட்டாயம்.காலம் மாறும் போது குஜராத்துக்கும், பீகாருக்கும் எப்படி நல்லகாலம் பிறந்ததோ அதை போன்று உபிக்கும் விடிவு காலம் பிறக்கும்.அப்போது மாயாவதிகளும் முலாயம்ங்களும் காணாமல் போவார்கள்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.