தாமரை பிரதரஸ் பதிப்பக வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது.

வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில் தொடங்கிய, தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுமக்களோடு பயணித்த ஒவ்வொரு அனுபவத்தையும், தினந்தோறும் பதிவு செய்யும் வாய்ப்பினை தினமலர் நாளிதழ் வழங்கியிருந்தது. தற்போது, நாளிதழில் வெளியான நமது பயண அனுபவங்களைத் தொகுத்து, ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று காலை, தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் ( கோவை) திரு.ஆதிமூலம், தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு.இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில்,தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் (மதுரை) மரியாதைக்குரிய திரு. Dr. L.ராமசுப்பு அவர்களிடம், ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தைப் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறேன்.

பெரும் பாரம்பரியமிக்க, தேசியச் சிந்தனை மிக்க தினமலர் நாளிதழ், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்ததோடு, பொதுமக்கள் நலனுக்காக எப்போதுமே குரல் கொடுத்து வரும் பெருமைக்குரியது. அரசுகள் தவறிழைக்கும் போது, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, ஜனநாயகத்தின், வலிமையான நான்காவது தூண் என்ற பத்திரிகை தர்மத்தினையும் கடைப்பிடித்து வரும் சிறப்புக்குரியது.

கடந்த 73 ஆண்டுகளாக, சீரிய முறையில் செயலாற்றி வரும் தினமலர் நாளிதழில், என் மண் என் மக்கள் பயண அனுபவங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதற்கும், அவற்றை, ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பதற்கும், நாளிதழ் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...