மதுரையில் ஏப்ரல் , 28, 29ல் நடைபெறும் பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு அரசியலில் தலை கீழ் மாற்றத்தை உருவாகும் . பாரதிய ஜனதா எந்த கட்சிக்கும் சளைத்தது இல்லை,” என்று , பா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநாடு பணிகளை ஆய்வுசெய்த அவர்
தெரிவித்ததாவது : ரிங்ரோட்டில் 67 ஏக்கரில்_அமைந்த முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி திடலில் மாநாடு நடைபெறுகிறது . அரங்கத்திற்கு முன்னாள்_பொருளாளர் சுகுமாறன் நம்பியாரின் பெயரிடபட்டுள்ளது.
பிப்., 1 முதல் ஒருலட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்பணி நடைபெறுகிறது . புதிய உறுப்பினர்களை மாநாட்டில் பங்கேற்க வைப்பதுடன், சுமார் 5 லட்சம்பேர் திரளுவர். மாநாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ” தமிழ் தாய் யாத்திரை‘ நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சார்பில் பாரதியார் யாத்திரை, மகளிரணி சார்பில் கண்ணகி யாத்திரை, தாழ்த்தப்பட்டோர் சார்பில் அம்பேத்கர்_சிலை ஊர்வலம் நடக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும், பாரதிய ஜனதா , ஆட்சி மலர்வதை உணர்த்த, மாநாட்டில் பார்லிமென்ட், சென்னை ஜார்ஜ்_கோட்டை மாதிரிகள் அமைக்கபடும். இவற்றை மக்கள் பார்க்கலாம். மாநாட்டின் முகப்பில் 10அடி உயரத்தில் கோட்டைசுவர் அமைக்கப்படும் . 27 லட்ச சதுரடியிலுள்ள அரங்கில் ஒருலட்சம் இருக்கைகள் போடப்படும். ஏப். 28 காலை நுழைவுகட்டணம் ரூ.10 வசூலிக்கபடும். மாலை பொது கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்
Tags; thamarai sangamam , தாமரை சங்கமம, மதுரை தாமரை சங்கமம்
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.