பெட்ரோல் விலை உயர்வினால் மத்திய அரசுக்கு இரட்டை வருவாய் ; முரளிதர ராவ்

பெட்ரோல் விலை உயர்வினால் மத்திய அரசுக்கு இரட்டை வருவாய் கிடைகிறது , வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய மதிப்பு ரூ.56 ஆக சரிந்திருக்கிறது என்று பா.ஜ.க தேசிய செயலர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது . முக்கிய துறைகள் அனைத்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. பெட்ரோலிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அதிகமாக இறக்குமதி_செய்வதால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது. இதனால் நம் நாட்டுக்கு வரவேண்டிய அந்நிய முதலீடு மற்ற நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றன.

ஆசிய நாடுகளில் பெட்ரோலின் விலை மிகக்குறைவாக இருக்கும் போது இங்குமட்டும் தொடர்ந்து உயர்த்தபட்டு வருகிறது..ஏழை, நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெறவேண்டும். இதனை வலியுறுத்தி மே 31ம் தேதி பாரத் பந்த்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது . இந்த பாரத் பந்த்துக்கு அனைத்து அமைப்புகளும், பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...