சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா?

வெறும் 2 லக்ஷம் ஊழியர்களை வைத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனம் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை தன் வசம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.இதற்க்கு மாறாக இந்திய சில்லறை வணிகம் 4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவருகிறது.

பாரதத்தில் சில்லறை வியாபாரம்

இந்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் பலமுனை அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது என்று முடிவெடித்து இருந்தது. இதை மத்திய அரசு கிடப்பில் போட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளே இந்த முடிவை எதிர்த்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த விஷயத்தில் எங்கே சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு அதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இடையே பலமுனை சில்லறை வணிகத்தில் கருத்து ஒற்றுமையை உருவாக்க இப்போது காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது.

இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஊடகங்களில் அவ்வப்போது முணு முணுப்புகள் எழுகின்றன.

இந்த சமயத்தில் உலகத்தின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட்டின் மோசடி வேலைகளைப் பற்றி "நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் செய்திக் கட்டுரையொன்று வெளியாகி உள்ளது. இந்த செய்தி ஏப்ரல் 22, 2012 தேதியில் பிற பத்திரிக்கைகளிலும் பிரசுரம் ஆனது. "மிகப் பெரிய மெக்ஸிகோ ஊழலை பாய்க்கு அடியில் சுருட்டி மறைக்க வால்மார்ட் முயற்சி" என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அவை. மெக்ஸிகோ நகரில் நடந்துள்ள இந்த ஊழல் நம் நாட்டுக்கு பல முக்கிய படிப்பினைகளைக் கொடுக்கிறது.

மெக்ஸிகோ நாட்டின் பொருளாதார சந்தையில் ஆதிக்கம் செலுத்த வால்மார்ட் பின்னிய ஊழல் வலைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்ரிக்கை பின்வருமாறு எழுதி உள்ளது, "மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட்டின் துரித வளர்ச்சிக்கு "லஞ்சம்" மிகப்பெரிய பங்கை வகித்துள்ளது". இதற்கான மிக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணி செய்தவர் சாப்ட என்பவர். அவர் மூலமாகத்தான் இந்த ஊழல் செய்தி அம்பலம் ஏறியுள்ளது.இவர் வால்மார்ட் சரக்குகளுக்கு "பர்மிட்டுகள்" வாங்கிக் கொடுக்கும் பணியில் 10 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். வால்மார்ட் ஊஷல்களைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போன அந்த ஆள் இப்போது அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இந்த ஊழல் விஷயங்களை எல்லாம் அவர் வால்மார்ட்டின் அமெரிக்க தலைமைக்கு அம்பலப்படுத்தி உள்ளார்.

1991 ஆம் ஆண்டில் வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டுக்குள் நுழைந்தது. வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கில் ஆதிக்கமும் ஏகபோகமும் செலுத்தும் அளவுக்கு வால்மார்ட் வந்துவிட்டது. வால்மார்ட்டுக்கு மெக்ஸிகோ நாட்டில் 2,765 ஸ்டோர்களும், ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. வால்மார்ட்டின் மிக நெருங்கிய வர்த்தக போட்டியாளர் சொரைன என்னும் கம்பனிக்கும் இந்த அளவுக்கு ஸ்டோர்கள் இருந்தன. வால்மார்ட் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 என்ற எண்ணிகையில் மெக்ஸிகோ நாட்டில் புது ஸ்டோர்களைத் திறந்த வண்ணம் இருந்தது. இம்மாதிரி கடந்த 21 வருடங்களாக மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட் ஸ்டோர்களை திறந்து கொண்டு வந்தது. இதன் விளைவாக மெக்ஸிகோ நாட்டில் 209000 ஊழியர்களுடன் வால்மார்ட் நிறுவனம் மிகப்பெரிய தனியார் முதலாளியாக உருவெடுத்தது.

இங்கு இரண்டு விஷயங்களை கவனிப்பது பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகளை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க வேண்டும். அப்போது இந்திய சில்லறை வணிகமும், அந்நிய சில்லறை வர்த்தக பெருவணிக நிறுவனங்களும், "சக வாழ்வு" நடத்த முடியும் என்று சிலர் வாதம் செய்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்றை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தை வால்மார்ட் கைப்பற்றிவிட்டது. அது மட்டுமல்ல, மெக்ஸிகோ நாட்டின் உள்ளூர் சில்லறை வணிகத்தை வால்மார்ட் சவக்கிடங்கிற்கு அனுப்பி ஊற்றி மூடிவிட்டது. உள்ளூர் சில்லறை வணிகர்களை குழிதோண்டி புதைத்து விட்டது. இந்தியாவின் பலமுனை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதித்தால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வெறும் 200000 ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்திக் கொண்டு வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைப் பறித்துக் கொண்டு விட்டதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் மெக்ஸிகோவின் ஜனத்தொகை 112 மில்லியன்கள் ஆகும். இதற்கு மாறாக இந்தியாவின் சில்லறை வணிகம் 40 மில்லியன்கள் அதாவது 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ளதையும் இவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

வால்மார்ட் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு ஆய்வாளர்களை அனுப்பியது. அங்கு போனவர்கள் மிகப் பெரிய அளவில் "லஞ்சம்" கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.120 கோடிகளுக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டு பிடித்தனர். மெக்ஸிகோ நாட்டின் வால்மார்ட் கம்பனியின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தெரியும் என்பதையும் அமெரிக்காவில் இருந்து சென்றவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கான ஆதார ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் தலைமை நிறுவனத்திற்கு தெரியாமல் அவர்கள் மறைத்து விட்டதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அது மட்டும் அல்ல 2003-2005 ஆண்டுகளில் மெக்ஸிகோ அரசாங்கத்திற்கு "நன்கொடையாகவும்" "காணிக்கையாகவும்" மெக்ஸிகோ வால்மார்ட் நிறுவனம் 80 கோடிகளை "நேரடியாக " கொடுத்தது. இதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இந்த லஞ்சப் பணம் எல்லாம் "வெளியார் வழக்கறிஞர்கள்" மூலமாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு கேச்டோர்ஸ் என்று பெயர். 2003-2005 இல் மட்டும் இவ்வாறு 441 கேச்டோர்ஸ் மூலமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அதாவது ஒரு வாரத்துக்கு மூன்றுமுறை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதால் "பெர்மிட்டுகள்" சுலபமாக கிடைத்தன. சுற்றுப்புற சூழ்நிலைகள் கெடுவது காரணமாக எழும் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் போயின. இந்த லஞ்சம் காரணமாக உள்ளூர் தலைவர்களின் "ஆதரவு" வால்மார்ட் நிறுவனத்திற்கு கிடைத்தது. நூற்றுக்கணக்கில் புது புது ஸ்டோர்களை ஒவ்வொரு வாரமும் திறக்க இந்த லஞ்சப்பணம்தான் உதவியாக இருந்தது. இவை எல்லாம் எவ்வளவு வேகத்தில் நடந்தது என்றால் வால்மார்டின் வணிகப் போட்டியாளர்கள் இந்த விஷயங்களை குறித்து பேசக் கூட அவகாசம் கிடைக்காத வேகத்தில் நடந்தன. வால்மார்ட் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டின் சட்டங்களை மீறியது. அமெரிக்காவில் அந்நிய ஊழல் நடவடிக்கை சட்டத்தை வால்மார்ட் மீறியது. அமெரிக்க கம்பனிகள் அவற்றின் கிளைகள் அந்நிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை இந்த சட்டம் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளது.

மெக்ஸிகோ வால்மார்டின் முதன்மை அதிகாரி ரைட் என்பவர் ஆண்டுக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு இவரே காரணகர்த்தா என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவருக்கு பெரிய பொறுப்புகள் "அவர் சேவைக்காக" அளிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இந்த ஆள் அமெரிக்க வால்மார்ட்டின் உதவி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த விஷயங்கள் எல்லாம் வால்மார்ட் நிறுவனத்தின் உலக தலைவராக உள்ள லீ ஸ்காட் என்பவருக்கு 2005 இல் தெரிய வந்தது.

இவர் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை ஆய்வை மெக்ஸிகோவிற்கு திரும்ப அனுப்பினார். வால்மார்ட் மெக்ஸிகோவின் எந்த அதிகாரியும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு வால்மார்ட் நிறுவனம் வேறு வழிஇன்றி லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்க நீதித் துறைக்கு தெரிவித்தது. செச்யூரிடீஸ் கமிஷனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க சட்டப்படி வெளிநாடுகளில் லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வால்மார்ட்டுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகள் தொடரும். இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படலாம். வால்மார்ட் மீது பெரும் அபராதத் தொகை விதிக்கப்படலாம். இதன் பிறகே இந்த லஞ்ச வழக்கு முடிவுக்கு வரும்.

ஆனால் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்களை வழங்குவோர் மெக்ஸிகோ நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டனர். வால்மார்ட் நிறுவனம் வளர்ந்தது. ஆனால் மெக்ஸிகோ நாட்டு சிறு வணிகர்களின் குடும்பங்கள் இப்போது நடுத்தெருவுக்கு வந்து விட்டன. அவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை என்ன நியாயம் வழங்க முடியும்? அவர்களுக்கு எல்லாம் ஈடு செய்ய இயலாத இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்க அரசு என்ன நீதி கொடுக்க முடியும்?

வால்மார்ட் வணிக நிறுவனம்தான் மெக்ஸிகோ நாட்டு மார்க்கெட்டுகளை தன்வசம், தன் கைப்பிடியில் வைத்துள்ளது. அத்யாவசியமான பண்டங்கள் அனைத்துக்கும் மெக்ஸிகோ நாடு தன்னைத்தான் நம்பி இருக்கவேண்டும் என்னும் நிலைமையை வால்மார்ட் உருவாக்கி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் வால்மார்ட்டுக்கு எதிராக மெக்ஸிகோ அரசாங்கம் என்ன கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிட இயலும்? வால்மார்ட் மெக்ஸிகோவில் பிரம்ம ராஷசனாக பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. இனிமேல் மெக்ஸிகோ அரசாங்கத்தால் வால் மார்ட்டை அடக்கமுடியாது, ஒடுக்க இயலாது. மெக்ஸிகோ நாடு இப்போது ஒரு அந்நிய கம்பனியான வால்மார்ட்டை அனைத்துக்கும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தன்னுடைய எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் ஒரு கம்பனிதான் மெக்ஸிகோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.

இம்மாதிரி சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க, இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு சாதாரண ஒழுங்குபடுத்தும் சட்டம் போதும். ஒரு குற்றப் பின்னணி உள்ள தனிநபர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போக விசா கொடுக்கப்படுவது இல்லை. இதே மாதிரி லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட, கடும் குற்றங்கள் இழைத்து உள்ள கம்பனிகளும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. இந்தியாவுக்குள் அத்தகைய கம்பனிகள் நுழைவது சட்ட பூர்வமாக தடை செய்யப்படவேண்டும்.

எந்த ஒரு அந்நியக் கம்பனியும் இந்தியாவுக்குள் வந்து கடை திறக்க அனுமதி கோரினால், அவர்களுடைய "வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும்" அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் இயங்கும் போது அந்த கம்பனிகள் தண்டனைக்குரிய குற்றங்கள் இழைத்து இருந்தால் அந்த விவரங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விஷயங்கள் சம்பந்தமாக சந்தேகமாக செயல்பட்டு இருக்கும் எல்லா கம்பனிகளும் இந்தியாவில் கடை திறக்க அனுமதிக்கப்படக் கூடாது. அவைகள் தடை செய்யப்பட வேண்டும்.

புது விஷயங்கள் தெரிய வரும்போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது முற்றிலும் சரியான நடைமுறைதான். இந்திய அரசாங்கம் மெக்ஸிகோவின் உதாரணத்தைப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களை அந்நிய கம்பனிகள் பலி கடா ஆக்காமல் தடுக்க முடியும்.

  வெறும் 2 லக்ஷம்  ஊழியர்களை வைத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனம் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை தன் வசம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.இதற்க்கு மாறாக இந்திய சில்லறை வணிகம் 4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவருகிறது.

பாரதத்தில் சில்லறை வியாபாரம்

இந்திய அமைச்சரவை  சில்லறை வணிகத்தில் பலமுனை அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது  என்று முடிவெடித்து இருந்தது. இதை மத்திய அரசு கிடப்பில் போட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளே  இந்த முடிவை எதிர்த்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த விஷயத்தில் எங்கே சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு அதை  மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளது. அரசியல் கட்சிகள்  இடையே  பலமுனை சில்லறை வணிகத்தில் கருத்து ஒற்றுமையை உருவாக்க இப்போது காங்கிரஸ் அரசு  முயற்சித்து வருகிறது.

இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஊடகங்களில் அவ்வப்போது  முணு முணுப்புகள் எழுகின்றன.

இந்த சமயத்தில் உலகத்தின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான  வால்மார்ட்டின் மோசடி வேலைகளைப் பற்றி “நியூயார்க் டைம்ஸ்” நாளிதழில் செய்திக்  கட்டுரையொன்று வெளியாகி உள்ளது. இந்த செய்தி  ஏப்ரல் 22, 2012 தேதியில் பிற பத்திரிக்கைகளிலும்  பிரசுரம் ஆனது. “மிகப் பெரிய மெக்ஸிகோ  ஊழலை பாய்க்கு அடியில் சுருட்டி மறைக்க வால்மார்ட் முயற்சி” என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அவை. மெக்ஸிகோ நகரில் நடந்துள்ள இந்த ஊழல் நம் நாட்டுக்கு பல முக்கிய படிப்பினைகளைக் கொடுக்கிறது.

மெக்ஸிகோ நாட்டின் பொருளாதார சந்தையில் ஆதிக்கம் செலுத்த வால்மார்ட் பின்னிய ஊழல் வலைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்ரிக்கை பின்வருமாறு எழுதி உள்ளது, “மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட்டின் துரித வளர்ச்சிக்கு “லஞ்சம்” மிகப்பெரிய பங்கை வகித்துள்ளது”. இதற்கான மிக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணி செய்தவர் சாப்ட என்பவர். அவர் மூலமாகத்தான் இந்த ஊழல் செய்தி அம்பலம் ஏறியுள்ளது.இவர்  வால்மார்ட் சரக்குகளுக்கு “பர்மிட்டுகள்” வாங்கிக் கொடுக்கும் பணியில் 10  வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். வால்மார்ட் ஊஷல்களைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போன அந்த ஆள் இப்போது அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இந்த ஊழல் விஷயங்களை எல்லாம் அவர் வால்மார்ட்டின்  அமெரிக்க  தலைமைக்கு  அம்பலப்படுத்தி உள்ளார்.1991 ஆம் ஆண்டில் வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டுக்குள் நுழைந்தது. வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கில் ஆதிக்கமும் ஏகபோகமும் செலுத்தும் அளவுக்கு வால்மார்ட் வந்துவிட்டது. வால்மார்ட்டுக்கு மெக்ஸிகோ நாட்டில் 2,765 ஸ்டோர்களும், ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. வால்மார்ட்டின் மிக நெருங்கிய வர்த்தக போட்டியாளர் சொரைன என்னும் கம்பனிக்கும் இந்த அளவுக்கு ஸ்டோர்கள் இருந்தன. வால்மார்ட் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 என்ற எண்ணிகையில் மெக்ஸிகோ நாட்டில் புது ஸ்டோர்களைத் திறந்த வண்ணம் இருந்தது. இம்மாதிரி கடந்த 21 வருடங்களாக மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட் ஸ்டோர்களை திறந்து கொண்டு வந்தது. இதன் விளைவாக மெக்ஸிகோ நாட்டில் 209000  ஊழியர்களுடன் வால்மார்ட் நிறுவனம் மிகப்பெரிய தனியார் முதலாளியாக உருவெடுத்தது.

இங்கு இரண்டு விஷயங்களை கவனிப்பது பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகளை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க வேண்டும். அப்போது இந்திய சில்லறை வணிகமும், அந்நிய சில்லறை வர்த்தக பெருவணிக நிறுவனங்களும், “சக வாழ்வு” நடத்த முடியும் என்று சிலர் வாதம் செய்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்றை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தை வால்மார்ட் கைப்பற்றிவிட்டது. அது மட்டுமல்ல, மெக்ஸிகோ நாட்டின் உள்ளூர் சில்லறை வணிகத்தை வால்மார்ட்  சவக்கிடங்கிற்கு அனுப்பி ஊற்றி  மூடிவிட்டது. உள்ளூர் சில்லறை வணிகர்களை  குழிதோண்டி புதைத்து விட்டது. இந்தியாவின் பலமுனை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதித்தால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வெறும் 200000 ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்திக் கொண்டு வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைப் பறித்துக் கொண்டு விட்டதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் மெக்ஸிகோவின்  ஜனத்தொகை 112 மில்லியன்கள் ஆகும். இதற்கு மாறாக இந்தியாவின் சில்லறை வணிகம் 40 மில்லியன்கள் அதாவது 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ளதையும் இவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

வால்மார்ட் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு  ஆய்வாளர்களை அனுப்பியது. அங்கு போனவர்கள் மிகப் பெரிய அளவில் “லஞ்சம்” கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.120  கோடிகளுக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டு பிடித்தனர். மெக்ஸிகோ நாட்டின் வால்மார்ட் கம்பனியின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தெரியும் என்பதையும் அமெரிக்காவில் இருந்து சென்றவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கான ஆதார ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் தலைமை நிறுவனத்திற்கு தெரியாமல் அவர்கள் மறைத்து விட்டதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அது மட்டும் அல்ல 2003-2005  ஆண்டுகளில் மெக்ஸிகோ அரசாங்கத்திற்கு “நன்கொடையாகவும்” “காணிக்கையாகவும்” மெக்ஸிகோ வால்மார்ட் நிறுவனம் 80 கோடிகளை “நேரடியாக ” கொடுத்தது. இதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இந்த லஞ்சப் பணம் எல்லாம் “வெளியார் வழக்கறிஞர்கள்” மூலமாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு கேச்டோர்ஸ் என்று பெயர். 2003-2005 இல் மட்டும் இவ்வாறு 441 கேச்டோர்ஸ் மூலமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அதாவது ஒரு வாரத்துக்கு மூன்றுமுறை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதால் “பெர்மிட்டுகள்” சுலபமாக கிடைத்தன. சுற்றுப்புற சூழ்நிலைகள் கெடுவது காரணமாக எழும் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் போயின. இந்த லஞ்சம் காரணமாக உள்ளூர் தலைவர்களின் “ஆதரவு” வால்மார்ட் நிறுவனத்திற்கு  கிடைத்தது. நூற்றுக்கணக்கில் புது புது ஸ்டோர்களை ஒவ்வொரு வாரமும் திறக்க இந்த லஞ்சப்பணம்தான் உதவியாக இருந்தது. இவை எல்லாம் எவ்வளவு வேகத்தில் நடந்தது என்றால் வால்மார்டின் வணிகப்  போட்டியாளர்கள்  இந்த விஷயங்களை குறித்து பேசக் கூட அவகாசம் கிடைக்காத வேகத்தில் நடந்தன. வால்மார்ட் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டின் சட்டங்களை மீறியது. அமெரிக்காவில் அந்நிய ஊழல் நடவடிக்கை சட்டத்தை வால்மார்ட் மீறியது. அமெரிக்க கம்பனிகள் அவற்றின் கிளைகள் அந்நிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை இந்த சட்டம் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளது.

மெக்ஸிகோ வால்மார்டின் முதன்மை அதிகாரி ரைட் என்பவர் ஆண்டுக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு இவரே காரணகர்த்தா என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  இவருக்கு பெரிய பொறுப்புகள் “அவர் சேவைக்காக” அளிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இந்த ஆள் அமெரிக்க வால்மார்ட்டின் உதவி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த விஷயங்கள் எல்லாம் வால்மார்ட் நிறுவனத்தின் உலக தலைவராக உள்ள லீ ஸ்காட் என்பவருக்கு 2005 இல் தெரிய வந்தது.

இவர் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை ஆய்வை மெக்ஸிகோவிற்கு திரும்ப அனுப்பினார். வால்மார்ட் மெக்ஸிகோவின் எந்த அதிகாரியும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு வால்மார்ட் நிறுவனம் வேறு வழிஇன்றி லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்க நீதித் துறைக்கு தெரிவித்தது. செச்யூரிடீஸ்  கமிஷனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க சட்டப்படி வெளிநாடுகளில் லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வால்மார்ட்டுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகள் தொடரும். இதனால்  வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படலாம். வால்மார்ட் மீது பெரும் அபராதத் தொகை விதிக்கப்படலாம். இதன் பிறகே இந்த லஞ்ச வழக்கு முடிவுக்கு வரும்.

ஆனால் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்களை வழங்குவோர் மெக்ஸிகோ நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டனர். வால்மார்ட் நிறுவனம் வளர்ந்தது. ஆனால் மெக்ஸிகோ நாட்டு சிறு வணிகர்களின் குடும்பங்கள் இப்போது நடுத்தெருவுக்கு வந்து விட்டன. அவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை என்ன நியாயம் வழங்க முடியும்? அவர்களுக்கு எல்லாம் ஈடு செய்ய இயலாத இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்க அரசு என்ன நீதி கொடுக்க முடியும்?

வால்மார்ட் வணிக நிறுவனம்தான் மெக்ஸிகோ நாட்டு மார்க்கெட்டுகளை தன்வசம், தன் கைப்பிடியில் வைத்துள்ளது. அத்யாவசியமான பண்டங்கள் அனைத்துக்கும் மெக்ஸிகோ நாடு தன்னைத்தான் நம்பி இருக்கவேண்டும் என்னும் நிலைமையை வால்மார்ட் உருவாக்கி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் வால்மார்ட்டுக்கு எதிராக மெக்ஸிகோ அரசாங்கம் என்ன கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிட  இயலும்? வால்மார்ட் மெக்ஸிகோவில்  பிரம்ம ராஷசனாக பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. இனிமேல் மெக்ஸிகோ அரசாங்கத்தால் வால் மார்ட்டை அடக்கமுடியாது, ஒடுக்க இயலாது. மெக்ஸிகோ நாடு இப்போது ஒரு அந்நிய கம்பனியான வால்மார்ட்டை அனைத்துக்கும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.  தன்னுடைய எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் ஒரு கம்பனிதான் மெக்ஸிகோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.

இம்மாதிரி சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க, இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு சாதாரண  ஒழுங்குபடுத்தும் சட்டம் போதும். ஒரு குற்றப் பின்னணி உள்ள தனிநபர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போக விசா கொடுக்கப்படுவது இல்லை. இதே மாதிரி  லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட, கடும் குற்றங்கள் இழைத்து உள்ள கம்பனிகளும் இந்தியாவுக்குள்  நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. இந்தியாவுக்குள் அத்தகைய கம்பனிகள் நுழைவது சட்ட பூர்வமாக தடை செய்யப்படவேண்டும்.

எந்த ஒரு அந்நியக் கம்பனியும் இந்தியாவுக்குள் வந்து கடை திறக்க அனுமதி கோரினால், அவர்களுடைய “வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும்” அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் இயங்கும் போது அந்த கம்பனிகள் தண்டனைக்குரிய குற்றங்கள் இழைத்து இருந்தால் அந்த விவரங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விஷயங்கள் சம்பந்தமாக சந்தேகமாக செயல்பட்டு இருக்கும் எல்லா கம்பனிகளும் இந்தியாவில் கடை திறக்க அனுமதிக்கப்படக் கூடாது. அவைகள் தடை செய்யப்பட வேண்டும்.

புது விஷயங்கள் தெரிய வரும்போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் மறு பரீசீலனைக்கு  உட்படுத்தப்பட வேண்டும். இது முற்றிலும் சரியான நடைமுறைதான். இந்திய அரசாங்கம் மெக்ஸிகோவின்  உதாரணத்தைப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களை அந்நிய கம்பனிகள் பலி கடா ஆக்காமல் தடுக்க முடியும்.

ஆங்கிலத்தில்:சேகர் சுவாமி

தமிழாக்கம்:எல்.என்.முர்த்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...