நீதிமன்றம் ஷரியா_சட்டத்தை மேற்கோள்காட்டி மைனர் முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை_ நியாயப்படுத்துகிறது. சிறுபான்மையோர் கமிஷன் "இஸ்லாமிய_வங்கிகளை" விரும்புகிறது. காங்கிரஸ்கட்சி முஸ்லிம் பகுதிகளில்_முஸ்லிம் போலிஸ் காரர்களை நியமிக்க விரும்புகிறது. நாமும் நமது நாடும் எங்கு, எந்தவழியில் போய் கொண்டிருக்கிறோம்?
ஒரு பிரசத்திபெற்ற வங்காள நாடகம் அந்த காலத்தில் நடந்தது. அதில் அலெக்ஸாண்டர் தன்னுடைய தளபதி செல்யுகசிடம் இவ்வாறு ஒரு காட்சியில் சொல்வதாக வருகிறது. "செல்யுகஸ், இந்த நாடு எவ்வளவு விசித்திரமாக உள்ளது? இந்த நாட்டின் மக்கள் எவ்வளவு விசித்திரமாக உள்ளனர்?" இதுதான் அலெக்சாண்டர் சொன்னதுதான். பார்த்ததை வைத்துக் கொண்டு உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டு அலெக்சாண்டர் இதை சொன்னாரா என்பது விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கலாம். இந்த நாடகத்தை எழுதியவர் தன்னை சுற்றி உள்ள நிதர்சனத்தை பார்த்தபிறகு தன்னுடைய கற்பனை வளத்தை பயன்படுத்தி அலெக்சாண்டர் வாயில் நாடகத்தில் இந்த வார்த்தைகளை வரவழைத்து இருக்கலாம். இது முற்றிலும் சாத்தியமான ஒன்றே. இந்த நாடகம் அரங்கேறி இன்று பல வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அலெக்சாண்டர் பார்த்ததற்கும், இன்றுள்ள நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. காலத்திற்கு அப்பாற்பட்ட இந்தியா அன்று இருந்தமாதிரியே இன்றும் விசித்திரமாகத்தான் உள்ளது. இந்தியா ஒருபோதும் வியப்பை தரத் தவறுவதே இல்லை.
இந்த வாரம் காலை பத்திரிக்கைகளை படித்துக் கொண்டு இருந்தபோது அலக்சாண்டர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வந்தன. முதுகெலும்பு அற்ற ஒரு அரசியல் தலைமை, என்ன செய்யவேண்டும் என்று விளங்காத நிர்வாக வர்க்கம், தனக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி, அரசாங்கம் தொடர்ந்து மரணப் படுக்கையில் இருந்த போதும் அதன் பயங்கர விளைவுகளை சிறிதும் நினைத்துப் பார்க்காமல் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கும் மக்கள் இவை அனைத்தும் நம்முடைய ஆச்சர்யமான நாட்டில் வியப்பைத்தான் உண்டாக்கும்.
தள்ளாடிக்கொண்டு இருக்கும் பொருளாதாரம், அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலைமை, ஆட்டம் காணும் சூழ்நிலை இவை அனைத்தும் ஒரு விசனத்துக்கு உரிய நிலையை தெரிவிக்கின்றன. யீட்ஸ் என்னும் ஒரு புகழ் வாய்ந்த கவிஞர் சொன்னது இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது. அவர் சொன்னார், "எங்கும் பொருட்கள் சிதறி விழுந்து கொண்டுள்ளன, மத்தியிலோ பிடிப்பு இல்லை. உலகத்தின் மேல் அழிவு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ரத்தவெள்ளம் ஓடுகிறது. எங்கும் ஓடுகிறது. அப்பாவிகளின் நடைமுறைகள் முழுகிப் போகின்றன. மிகச் சிறப்பாக உள்ளவர்களுக்கு எந்த "கொள்கைகளும்" கிடையாது. ஆனால் மிகவும் கீழ்தரமாக இருப்பவர்களோ 'நினைத்ததை சாதிக்க உச்ச பட்சத் துடிப்போடு உள்ளனர்".
நம்மிடையே மிக மோசமானவர்கள் உள்ளனர். அதிலும் நம்மிடையே எந்த பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இன்றி, அதே சமயத்தில் அதிகாரத்தையும், ஆளுமையையும் கொண்டு இருப்பவர்கள் உள்ளனர். அவர்கள் மிகத் துடிப்போடு செயல்படுகின்றனர். விஷயங்கள் சடசடவென்று சரிந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி, மத்தியில் எதையும் தட்டிக் கேட்க இயலாத, எதற்கும் லாயக்கற்ற அரசாங்கம் இருப்பதை சாதகமாக்கி, தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள பலர் நம் நாட்டில் செயல்பட்டு வருகின்றனர். இதை மூன்று விஷயங்கள் நன்கு விளக்கிடும்.
டில்லி உயர் நீதி மன்றம் சமீபத்தில் திகைப்புக்கு உரிய அதிர்ச்சி ,அளிக்கும் தீர்ப்பு ஒன்றைக் கொடுத்துள்ளது. 15 வயதே ஆன ஒரு முஸ்லிம் பெண்ணின் திருமணம் செல்லுபடியாகும் என்று அது சமீபத்தில் தீர்ப்புக் கொடுத்துள்ளது. இவ்வாறு ஒரு மைனர் பெண்ணின் உரிமைகளையும், கௌரவத்தையும் காற்றில் பறக்கவிட ஷரியத் சட்டம் அனுமதிக்கிறது என்று தனது தீர்ப்பை டில்லி உயர் ,நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம். அந்த பெண் வயதிற்கு வந்து விட்டால் அவளுக்கு 18 வயது ஆகவில்லை என்றாலும் கூட, அவள் தன் கணவனுடன் குடும்பம் நடத்தலாம், வாழலாம் என்று டில்லி உயர்நீதி மன்றம் ஷரியத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு தீர்ப்பை தங்கள் அறிவுக்கு ஏற்ப மேதாவித்தனமாக நீதிபதிகள் கொடுத்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் இந்தியாவின் முஸ்லிம்களுக்கு தான்தான் ஒரே பிரதிநிதி என்று பறைசாற்றிக் கொள்கிறது. இவ்வாறு உரிமை கொண்டாட அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் கூட அந்த அமைப்பு இவ்வாறு செயல்படுகிறது. அந்த முஸ்லிம் சட்ட அமைப்பு டில்லி உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எக்களிப்புடன் வரவேற்றுள்ளது. இந்த விஷயம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. அடிமைப்படுத்தும், அடக்கி ஆளும் எந்த ஒரு விஷயத்தையும் முல்லாக்கள், மௌலவிகள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆதரிப்போர் ஆவலுடன் வரவேற்பார்கள்.
தேசிய சிறுபான்மையோர் ஆணையம் (உண்மையில் இது தேசிய முஸ்லிம்கள் ஆணையம்) இஸ்லாமிய வங்கித் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கேட்டுள்ளது. வாஜஹத் அபிபுல்லாதான் இந்த தேசிய சிறுபான்மையோர் கமிஷனின் தலைவர். அவர் இவ்வாறு சொல்லி உள்ளார்,
"தற்போதுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில், இஸ்லாமிய வங்கியை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதால் சட்டத்தை திருத்தி வட்டி இல்லாத வகையில் வங்கிகளை இயக்க வழி காணவேண்டும்". வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இது கொல்லைபுற வழியாக இஸ்லாமிய வங்கியை கொண்டு வர முயல்வதாகும்.
இந்த அணுகுமுறை கடந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் சமீபத்தில் அதாவது மார்ச் 2012இல் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நிதித்துறை துணை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். "இப்போது உள்ள சட்டங்கள், விதிமுறைகளின் அடிப்படையில், இந்தியாவில் இயங்கும் வங்கிகள் "இஸ்லாமிய வங்கிகளை, சட்ட பூர்வமாக ஏற்படுத்த முடியாது". இந்தியாவிலும் இந்திய வங்கிகளால் இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இந்திய வங்கிகளின் கிளைகளால், அயல் நாடுகளிலும், இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது". இவ்வாறு ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதாக நிதித்துறை துணை அமைச்சர் சொன்னார். ஆனால் இதன் பிறகு நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் தன்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், சட்டங்களை திருத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாதிரி கோரிக்கை வைக்கப்படவேண்டும் என்பதற்காகவே ஜமியத் இ இஸ்லாமி காத்துக் கொண்டு இருந்தது. காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்த்து "சிறுபான்மை இசத்தை" வளர்ப்பதில் ஊக்குவிப்பதுபோல் ஜமியத் இ இஸ்லாமியும் கருத்து கொண்டுள்ளது. அது இப்போது "இஸ்லாமிய வங்கியின் அமைப்பு வந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி "முஸ்லிம்களுக்கு விளக்க "பயிற்சி வகுப்புகளை" நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் அது மாதிரி பயிற்சி வகுப்பு ஒன்று அசாம்கர் (உத்திரப் பிரதேசம்) நகரில் நடைபெற்றது. அதில் ஷரியாவை நன்கு அறிந்த மௌலானாக்கள் கலந்து கொண்டு வழி காட்டினர்.
மூன்றாவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பெருக்க அக்கட்சி முயற்சிக்கிறது. அதனால் ஏதாவது செய்வது போன்ற ஒரு தோற்றத்தை, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்வது போன்ற தோற்றத்தை அக்கட்சி உருவாக்க முயற்சிக்கிறது. இப்படி செய்தால் விரைவில் தேர்தல்கள் வரும்போது கொழுத்த முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் கணக்கு போடுகிறது. உண்மையில் சொல்வது என்றால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையோருக்கு அளவற்ற சலுகைகள் உள்ளன. அவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்னும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், முஸ்லிம் வாக்குகளை பெற மத்திய காங்கிரஸ் அரசு சமீபத்தில் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. என்ன தெரியுமா? முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ்காரர்களை நியமிக்கவேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மாநிலத் தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .
முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒரு விதத்தில் இந்த கடிதம் மாநில அரசுகளின் உரிமைகளில் கை வைக்கிறது. ஏன் என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் அத்தகைய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த கவலையும் படவில்லை. கூட்டாச்சி என்பது ஒரு இழிந்த சொல் என்று காங்கிரஸ் கூட்டணி அரசு கருதுகிறது. தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வாடிக்கை ஆக்கிக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு பல சமயங்களில் அவ்வாறு செய்து அது தன் முகத்தில் கரியை பூசிக்கொண்டது. இருந்தும் முஸ்லிம் வோட்டுகளுக்காக மீண்டும் ஒருமுறை இவ்வாறு மாநிலங்களின் உரிமைகளில் மூக்கை நுழைக்க மத்திய உள்துறை அமைச்சரகம் முயன்றுள்ளது. இதை எல்லாம் பார்த்தால் "சில பழக்கங்களை கைவிட முடியாது " என்பது நினைவுக்கு வருகிறது.
முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் முஸ்லிம்கள் ஹிந்து போலீஸ்காரர்களை நம்பவில்லையா? ஹிந்து போலீஸ்காரர்கள் தங்கள் பகுதிகளை காவல் செய்வது முஸ்லிம்களுக்கு சிரமமாக உள்ளதா? இந்த கேள்விகள் எழுகின்றன அல்லவா? அப்படி என்றால் ஹிந்துக்கள் தாங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஹிந்து போலீஸ்காரர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கேட்கலாம் அல்லவா? அல்லது இன்னும் பச்சையாகக் கேட்க வேண்டும் என்றால் முஸ்லிம்கள் ஹிந்து போலீஸ்காரர்களை நம்பமுடியாது என்றால், ஹிந்துக்கள் மட்டும் எப்படி ஏன் முஸ்லிம் போலீஸ்காரர்களை நம்ப இயலும்?
இந்த இரண்டுமே ஏற்றுக் கொள்ள முடியாத வாதங்களாகும். சமூகங்கள் நேர்மையாக தங்களுடைய கடமைகளை விருப்பு வெறுப்பு அற்று நேர்மையாக செய்யும் போலீஸ்காரர்கள் அல்லது பெண் போலீசாரை நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை. அத்தகைய போலீஸ்காரர்களை எல்லா சமூகங்களும் விருப்பமானவர்களாகவே பார்க்கின்றனர். ஆனால் வோட்டு வங்கிகளை மனதில் வைத்து செயல்படும் குள்ளநரித்தனமான அரசியல்வாதிகள்தான் விஷயத்தை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர். அவர்கள்தான் சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப் படுபவர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு போலீஸ்காரர்களின் சமய அடையாளத்தைப் பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் குற்றங்களை, குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டுகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று உதாரணங்களை வைத்துக் கொண்டு நம்நாடு அபாய வளையத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது என்று சொல்ல முடியாது என்று ஒரு வாதம் வைக்கப் படலாம். இதில் இருந்து மீளமுடியாது என்று சொல்வது தவறு என்றும் வாதிக்கலாம். இந்த மூன்று உதாரணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு உலகத்தின் மேல் அழிவும், நாசமும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது என்று சொல்ல முடியாதுதான். ரத்த அலைகள் எழும்பிவிட்டன என்றும் சொல்ல முடியாதுதான். எங்கும் அப்பாவிகள் அழிந்து போகின்றனர் என்றும் சொல்ல முடியாதுதான். ஆனால் இவற்றை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று உதறித்தள்ள முயல்வது ஹிமாலய முட்டாள்தனமாகும்.
இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் நாம் விட்டபோதெல்லாம், அவற்றை விட கொடுமையான பல நிகழ்வுகளை நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. இதை நாம் மறந்துவிடக் கூடாது. இம்மாதிரி தாக்குதல்களை தாங்கிக் கொள்ள நம்முடைய குடியரசுக்கு உள்ளார்ந்த வலிமை உள்ளது என்று நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்ட போதெல்லாம், நம்முடைய குடியரசு நாடு பலவீனம் அடைந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இங்கே ஒரு சமாதானம் செய்துகொள்வது, அங்கே ஒரு விட்டுக் கொடுப்பது என்னும் நிலை "பலகீனமான சமரசம் " செய்து கொள்வதை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய தாஜா செய்வதால் நாம் என்னவெல்லாம் விலை கொடுக்க நேர்ந்தது, எத்தனை முறை பயங்கர விலைகள் கொடுத்துள்ளோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.
ஆனால் விசித்திரமான நம் நாட்டில் விசித்திரமாக உள்ள மக்களாகிய நாம் "சரித்திரம் சொல்லும் பாடத்தை" கற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
ஆங்கிலத்தில்: காஞ்சன் குப்தா
தமிழாக்கம்: இல.ரோகிணி
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.