பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்; புத்தக விமரிசனம்

 பஞ்சம்- படுகொலை- பேரழிவு கம்யூனிஸம்; புத்தக  விமரிசனம்பொதுவுடைமை சித்தாந்தம் என்று பிரபலப்படுத்தப்பட்டுள்ள ஒன்றைப்பற்றி வழக்கம்போல ஆதாரங்களுடன் “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” என்று நூலாக்கி (இரும்புத்)திரை மறைவு தகவல்களை பரிமாறியிருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.தமிழகத்தில் ‘த ஹிந்து’ நாளிதழ் என்.ராம் என்ற பொதுவுடைமைவாதியால் எப்படி சீன கம்யூனிஸ்டு கட்சி பிரச்சாரக்கருவி ஆக்கப்பட்டது என்ற தகவல் ஒரு உதாரணம்:

இந்திய ஊடகங்களில் ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஊடுருவல் வெற்றிகரமாக நடந்தது.கே.ஜி.பி.ஆவணங்களின்படி 1972இல் இந்திய ஊடகங்களில் சோவியத் உளவுத்துறையால் 3,789 செய்திக்கட்டுரைகள் ‘நடப்பட்டன’.இதுவே 1975 இல் 5510! கம்யூனிஸ்ட் அல்லாத நாடு ஒன்றில் இந்த அளவு வெற்றி கே.ஜி.பி.க்கு இந்தியாவில் மட்டுமே கிடைத்தது.

மாவோ ஆன மஹாவிஷ்ணு

“இந்தியாவில்  சோவியத் ஆதரவு போலவே சீன ஆதரவும் ஊடக ஊடுருவல் மூலமாக நிகழ்ந்தது".இதன்மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது சென்னையிலிருந்து வெளியாகும் ‘த ஹிந்து’ நாளேடு.இதன் ஆசிரியக் குழுவில் என்.ராம் வந்தப்பிறகு,அது ஏறக்குறைய சீனச் செய்தி நிறுவனத்தின் இந்திய பதிப்பாகவே நடந்து வந்துள்ளது எனச் சொல்கிறது சென்னையிலிருந்து இயங்கும் திபத்திய மாணவர் அமைப்பு.இதனை வெறும் சீன எதிர்ப்பு எனச் சொல்லிவிடமுடியாது.ஏனெனில் அவர்கள் இது குறித்து கொடுத்துள்ள தரவுகள் அத்தனை எளிதில் மறுக்க இயலாதவை.

“உதாரணமாக,ஏப்ரல் 19,2006 இல் சீன அதிபர் அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவரான பில்கேட்ஸைச் சந்திக்கிறார்".இதனைப் பிரதான செய்தியாகச் சீனப் பத்திரிகைகள் வெளியிட்டன.இதனை புகைப்படம் சகிதம் பிரதான செய்தியாக வெளியிட்ட இந்திய நாளேடு ‘த ஹிந்து’தான்!!

சீன கம்யூனிஸ்ட் தலைவர் பில்கேட்ஸிடம், “நான் மைக்ரோஸாஃப்ட்டின் எதிரி அல்ல” என வாய்நிறையப் பல்லுடன் கூறியதை பிரதான செய்தியாக வெளியிட்ட த ஹிந்து, அதே நாள் இரண்டு முக்கிய சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் சீனா குறித்து வெளியிட்ட அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிடவில்லை; அவையாவன: 2005 இல் உலகிலேயே அதிக மரண தண்டனைகளை நிறைவேற்றிய நாடு சீன ‘மக்கள் குடியரசு தான்’ என்கிறது சர்வதேச அம்னெஸ்டி நிறுவனம்.மற்றொன்று சீனாவின் குற்றவாளிகள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுகின்றன.(ஆதாரம்:ராய்ட்டர்) இந்த்ய நாளேடான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இவற்றை வெளியிட்டிருந்தது.

என்.ராம் ‘த ஹிந்து’வின் அதிகார வட்டத்துக்குள் வந்தவுடன் தொடங்கிய மாதம் இருமுறை இதழ் ஃப்ரண்ட்லைன். பலர் இப்பெயர் மூலத்திலிருக்கும் நுண்ணிய செய்தியைக் கவனிக்கவில்லை;சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ இதழ் க்யான்ஸியானின் பொருள் அது.(Qian xian=front line)

பொருள் பொதிந்த பின்வரும் வரிகளுடன் நூல் முடிகிறது. “இந்து தேசத்தின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் மேலாக சித்தாந்தத்தை வைக்கும் எந்த அமைப்பும் இயக்கமும் ஒதுக்கப்பட வேண்டியதே” ஒதுக்கப்பட வேண்டியதை குறைந்த பட்சம் கேரள,மேற்கு வங்க வாக்காளர்கள் ஒதுக்கியிருக்கிறார்கள்.திரிபுரா வாக்காளர்களுக்கும் தகவல் எட்டினால் சரி.

புத்தகத்தின் பெயர்:  பஞ்சம்- படுகொலை- பேரழிவு கம்யூனிஸம்

நூலாசிரியர்:அரவிந்தன் நீலகண்டன்

வெளியீடு:கிழக்குப்பதிப்பகம் பக்கங்கள்:312 விலை ரூ.160/-

இப்படிக்கு கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...