மத்திய அமைச்சரவையிலிருந்து இமாச்சலத்தை சேர்ந்த வீர்பத்திரசிங் இன்று தனது பதவியை ராஜினாமாசெய்தார்.
1989ம் ஆண்டில், இமாச்சல_பிரதேச முதல்வராக இருந்தவர் வீர்பத்திர சிங். இவர் முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் முதலீடுசெய்ய
விரும்புபவர்கள், குறிப்பிட்ட அளவு லஞ்சம்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். எவ்வளவு பணம் தர வேண்டும் என்பது குறித்து இவர் சில தொழிலதிபர்களுடன் பேசியபேச்சுக்கள் அடங்கிய ஆடியோ சிடி’யை, காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த விஜய் சிங் மன் கோத்தியா, கடந்த 2007ம் ஆண்டே வெளியிட்டார். இதனை தொடர்ந்து நடத்தபட்ட விசாரணையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு சிம்லாவில் சிறப்புகோர்ட்டில் நேற்று குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது . அவருக்கு எதிராக வழக்குதொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவர் பதவி விலகவேண்டும் என பா.ஜ.க உள்ளிட்ட பல கட்சிகள் குரல் கொடுக்கவும் தனது பதவியை ராஜினாமாசெய்ய முடிவுசெய்து பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தந்தார்
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.