முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!!

முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!! நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை

ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது. மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது மாற்ற முடியாது , பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக் கர்மவினைகள் குறையத்து வங்கும் அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும்.

சனியும், செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது. நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்; இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை.

மேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள். அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும். அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள்.

ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால், அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்; அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும். நம் கர்மவினைகளை மாற்றும் சக்தி அன்னதானத்துக்கு உண்டு என்பதை 40 வருட ஆன்மீக ஆராய்ச்சியாளர் , ருத்ராட்ச தெரபிஸ்ட் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.2007 முதல் 2012 வரை இந்தக் கருத்தை ஆராய்ந்து பார்த்ததில் முழு உண்மை என்பது தெரிந்தது.எனவே, மேற்கூறிய கிரகநிலையில் இருப்பவர்கள் பின்வரும் விதமாக அன்னதானம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரையிலும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் காசிக்கு நாம் சென்று அங்கே ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

காசிக்கு நாம் சென்று ஒரு வருடம் வரை தங்கி, ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஒரு வருடம் முழுக்க அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே இருக்கும் அண்ணாமலையில் ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

நாம் பிறந்தது முதல் நமது மரணம் வரையிலும் காசியிலேயே தங்கி ஒரு நாளுக்கு அன்னதானம் 1,00,00,000 பேர்கள் வீதம் நமது ஆயுள் முழுக்க அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் திரு அண்ணாமலையில் துவாதசி திதியன்று மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்பதை ஒரு துறவி எனக்கு உபதேசித்தார். இதை ஒரே ஒரு முறை அண்ணாமலையில் பரிசோதித்துப் பார்த்ததில் உண்மை என்பது மட்டுமல்ல;பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.எனவே எனது ஹிந்து சகோதர,சகோதரிகளுக்காக இந்த ஜோதிடக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.மேலும்,ஒவ்வொரு தமிழ் வருடமும் வரும் ஆடி அமாவாசை ,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை நாட்களிலும் இதே போல ஒரு வருடத்தில் அன்னதானம் செய்தாலே நாம் சகலவிதமான சாபங்களிலிருந்தும்,பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிடலாம் என்பதை அனுபவ பூர்வமாகச் சொல்லமுடியும்.

நந்தன ஆண்டின் துவாதசி திதி நாட்களை இங்கே கொடுத்துள்ளோம்.இதில் ஒரு நாள் மதியத்திலிருந்து மறு நாள் மதியம் வரையிலும் வரும் துவாதசி திதி நாட்களை தவிர்ப்பது அவசியம்.ஏனெனில்,ஹிந்துக் காலக் கணக்குப்படி ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான கால கட்டமே ஒரு நாள் ஆகும்.அப்படி வரும் துவாதசி திதி நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்வதே சிறப்பு ஆகும்.இந்த பட்டியலில் உங்களுக்கு உகந்த துவாதசி நாட்களில் ஏதாவது ஒரு 6 துவாதசி நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்து வளமோடு வாழ்க!!!

நந்தன ஆண்டின் துவாதசி திதி வரும் நாட்கள்

17.4.12 செவ்வாய் காலை 8.12 முதல் 18.4.12 காலை 8.52 வரை;

2.5.12 புதன் மாலை 6.49 முதல் 3.5.12 வியாழன் மாலை 4.54 வரை;

16.5.12 புதன் இரவு 10.39 முதல் 17.5.12 வியாழன் நள்ளிரவு 12.09 வரை(17.5.12 முழுவதும் என்று எடுத்துக் கொள்ளவும்);

1.6.12 வெள்ளி முழுவதும்;

15.6.12 வெள்ளி மதியம் 1.48 முதல் 16.6.12 சனி மதியம் 3.42 வரை;

30.6.12 சனி காலை 10.07 முதல் 1.7.12 ஞாயிறு காலை 7.10 வரை;

15.7.12 ஞாயிறு முழுவதும்;

29.7.12 ஞாயிறு மாலை 5 முதல் 30.7.12 திங்கள் மதியம் 2.46 வரை;

14.8.12 செவ்வாய் முழுவதும்(இரவு 9.14 வரை);

28.8.12 செவ்வாய் முழுவதும்;

12.9.12 புதன் காலை 10.18 முதல் 13.9.12 வியாழன் காலை 10.36 வரை;

26.9.12 புதன் காலை 10.20 முதல் 27.9.12 வியாழன் காலை 9.20 வரை;

12.10.12 வெள்ளி முழுவதும்;

26.10.12 வெள்ளி முழுவதும்;

10.11.12 சனி காலை 11.54 முதல் 11.11.12 ஞாயிறு காலை 10.26 வரை;

24.11.12 சனி மதியம் 1.40 முதல் 25.11.12 ஞாயிறு மதியம் 2.45 வரை;

10.12.12 திங்கள் முழுவதும்;

24.12.12 திங்கள் காலை 7.34 முதல் இன்று முழுவதும்;

8.1.13 செவ்வாய் காலை 10.20 முதல் 9.1.13 புதன் காலை 8.02 வரை;

23.1.13 புதன் முழுவதும்;

7.2.13 வியாழன் முழுவதும்(மாலை 6.36 வரை);

22.2.13 வெள்ளி முழுவதும்;

8.3.13 வெள்ளி முழுவதும்;

23.3.13 சனி மாலை 4 முதல் 24.3.13 ஞாயிறு மாலை 4.39 வரை;

6.4.13 சனி மாலை 5.46 முதல் 7.4.13 ஞாயிறு மாலை 4.36 வரை;

அன்னதானத்தை மனப் பூர்வமாகவும், கிரிவலப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களின் வாசலிலும் செய்வது அவசியம் ஆகும்.காலையிலும் இரவிலும் கோவில் வாசலில் அன்னதானம் செய்ய வேண்டும்;மதிய நேரத்தில் கிரிவலப்பாதையில் வாகனத்தில் பயணித்து அன்னதானம் செய்வோம்;

இப்படிக்கு ஜோதிட முனி, கை. வீரமுனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

One response to “முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!!”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...