நரேந்திர மோடியை போன்று அரசியல் தலைவர் எவரும் இழிவுபடுத்தபட்டதில்லை

நரேந்திர மோடியை போன்று  அரசியல் தலைவர்  எவரும்  இழிவுபடுத்தபட்டதில்லை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போன்று எந்தஒரு அரசியல் தலைவரும் இழிவுபடுத்தபட்டதில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது முன்னாள் குடியரசு தலைவர்

அப்துல்கலாம் எழுதிய டர்னிங் பாயிண்ட்ஸ் எனும் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அந்தபுத்தக்கதின் 9வது அத்தியாயத்தில் இருக்கும் செய்தி எனக்கு எப்படியோ தெரியவந்தது. அதில் கலாமின் 2002ம் ஆண்டு ஆகஸ்ட்மாத குஜராத் சுற்றுப் பயணம் குறித்தும், அதில் ஒருசில பகுதிகள் குறித்து மட்டும் ஊடகங்கள் செய்திவெளியிட்டது குறித்து குறிப்பிடபட்டுள்ளது.

இந்திய அரசியல் வரலாறிலேயே நரேந்திர மோடியை போல் வேறு எந்தஒரு அரசியல் தலைவரும் திட்டமிட்டு இழிவுபடுத்தபடவில்லை என நான் அடிக்கடி நினைப்பதுண்டு . குஜராத் கலவரம் நடைபெற்ற பொது அப்துல் கலாம் குஜராத்செல்ல விரும்பியதாகவும், ஆனால் அவரை தடுத்துநிறுத்துவது போன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்தநேரத்தில் நீங்கள் குஜராத்துக்கு செல்வது அவசியமா என கேட்டார் என்று குறிப்பிடபட்டுள்ளது.

மோடி அரசு அப்துல் காலமுக்கு முழுஆதரவு தந்தது . அதை எல்லாம் ஒரு செய்தியாளரும் தெரிவிக்கவில்லை. கலவரம் நடக்கும் இடத்துக்கு எந்த ஒரு குடியரசு தலைவரும் சென்ற தில்லை என்றும், அவர் ஏன் அந்தநேரத்தில் குஜராத்செல்ல விரும்புகிறார் என பலர் கேட்டதாகவும் கலாம் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

இந்தசமயத்தில் நீங்கள் கண்டிப்பாக குஜராத் செல்லவேண்டுமா என வாஜ்பாய் கேட்டார். ஆமாம் இதை நான் முக்கிய_கடமையாக நினைக்கிறேன். நான் அங்குசென்று நிவாரண பணிகளை துரிதப்படுத்து வேன் என கலாம் தெரிவித்தார் .

அதன் பிறகு கலாம் தெரிவித்ததை குறிப்பிட வேண்டும் .

“நான் காந்தி நகரில் இறங்கிய போது விமான நிலையத்தில் முதல்வர், அமைச்சர் கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து எனக்கு சிறப்பு வரவேற்பு தந்தது ஆச்சரியமாக இருந்தது. கலவரம் பாதிக்கப்பட்ட ஒன்பது இடங்கள் மற்றும் மூன்று நிவாரண முகாம்கள் என 12 இடங்களுக்கு_சென்றேன். எனது பயணம் முழுவதும் நரேந்திரமோடி என்னுடன்தான் இருந்தார். என்னுடன் அவர் இருந்ததும் ஒருவழியில் நல்ல தாய் போயிற்று. செல்லும் இடங்களில்பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள்மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நான் அவருக்கு பரிந்துரைசெய்தேன் என கலாம் குறிப்பிட்டுள்ளதாக அத்வானி தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...