பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் ரீதியாக ஆண்மை அற்றவராக இருக்கிறார் என சிவசேனா தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார் .
இதற்கெல்லாம் முடிவுகட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்கவேண்டும் என கூறியுள்ளார் இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், செயல்
திறனற்றவர் என பிரதமரை ஒருபத்திரிக்கை கூறியுள்ளது. அப்படி எனில் என்ன அர்த்தம் என மக்களுக்கு புரியவில்லை . எனது பாஷையில் சொல்வதென்றால் , அரசியல் ஆண்மையற்றவர் என சொல்லலாம்.
அதேசமயம் டைம் பத்திரிக்கை எதைச்சொன்னாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என அர்த்தமில்லை. காரணம் டைம் பத்திரிக்கை தனதுதொழிலை செய்துள்ளது.
சில காலத்துக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, இந்தியர்களால் அதிகம் வெறுக்கபடும் அரசியல் வாதி என இதே டைம் பத்திரிக்கை தான் வர்ணித்தது. ஆனால் மோடியை வெறுத்தவர்கள், இந்துத்துவாவை விரும்பாத சக்திகள்மட்டுமே.
இது நாள்வரை பிரதமர் மன்மோகன்சிங்கை உள்ளூர் பத்திரிகைகள் தான் சாடி வந்தன. தற்போது வெளிநாட்டு பத்திரிகைகளும்கூட அதைச் செய்யத்தொடங்கி விட்டன என்றார் .
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.