ஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்ய கோரி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று அந்த_அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,” தமிழக திருக்கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி இந்து முன்னணி கடந்த சில மாதங்களாக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இந்தக் கையெழுத்து இயக்கம் மாநகரங்களில் மட்டுமின்றி நகரம், கிராமம் என்று அனைத்துத் தர மக்களிடமும் சென்றடைந்துள்ளது.
இந்து முன்னணியின் கோரிக்கைக்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்து வருகிறது.ஆலய இறைவனைக் காட்சிப் பொருளாக்கிக் காசு பார்க்கும் வியாபாரத்தனமானதே தரிசனக் கட்டண வசூல். இதனால் ஆலயத்தில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் ஏற்படுகிறது. தரிசனக் கட்டணம், சிறப்புத் தரிசனக் கட்டணம், வி.ஐ.பி. தரிசனக் கட்டணம், விரைவு தரிசனம் என்று விதவிதமாகத் தொங்கும் போர்டுகள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயல்.
இறைவன் முன் அனைவரும் சமம். அனைவரும் இறைவனைத் தரிசனம் செய்யத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டியது ஆலய நிர்வாகத்தின் பொறுப்பு.சர்ச்களிலோ, மசூதிகளிலோ அங்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அண்டை மாநிலமான கேரளா மற்றும் வட மாநிலங்களில் இறைவனைத் தரிசிக்கக் கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிப்பதில்லை. அதிலும் சாதாரண மக்கள் தரிசனம் செய்ய வசதிகள் செய்து தரப்படுகிறது.
தமிழகத்திலும் தனியார் நடத்தும் பல கோயில்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்காமலே சிறப்பாக, மக்கள் பாராட்டும் விதமாக நடைபெற்று வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அப்படியிருக்க கோடி கோடியாய் உண்டியல் வசூல் செய்யும் தமிழக அறநிலையத்துறை நிர்வகிக்கும் ஆலயங்களில் ஏன் இந்த நடைமுறை?
தனியார் வசம் இருந்த கோயில்களில் ஊழல் நடப்பதாகக் கூறி அரசு அறநிலையத்துறையை அமைத்து, கோயில்களைத் தன் வசம் ஆக்கிக்கொண்டது. அதில்தான் மகா மகா ஊழல் நடைபெறுகிறது. அரசின் எல்லாத் துறைகளும் ஊழல் மயமாகிவிட்டது. அவற்றைச் சரி செய்ய அவற்றையெல்லாம் யாரிடம் ஒப்படைப்பது?ஆலயத்தை அரசு அலுவலகமாக்கி, பொருட்காட்சியைப் போல அறநிலையத்துறை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது. ஆலயச் சொத்துகளை முறையாகப் பராமரித்தாலே ஆலயத்தை நிர்வகிக்கப் போதுமான வருமானத்திற்கு மேல் கிடைக்கும்.
அரசு ஆலயச் சொத்துகளைக் காப்பதை அலட்சியப்படுத்துகிறது. காரணம் ஆலயச் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகள் என்பதால்தான்.முதன் முதலில் காஞ்சிபுரத்தில் தரிசனக் கட்டணம் விதித்தபோது மக்கள் தரிசனக் கட்டணம் கொடுக்காமல் கொடி மரத்திற்கு அருகில் நின்று சுவாமியைத் தரிசிக்கிறார்கள் என்று சுவாமியை மறைத்துத் திரை போட்டார்கள். ஆன்மீகப் பெரியோர்கள் எதிர்ப்பிற்குப் பின் திரை அகற்றப்பட்டது.
எத்தனை வெட்கக்கேடான செயல் இது. அதைவிட கொடுமையாக முக்கிய நாட்களில் தர்ம தரிசனத்தை நிறுத்தி சிறப்பு தரிசனத்தை அனுமதிப்பது. திரையரங்குகளில் முதலில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு டிக்கட் கொடுத்த பின்னரே சாதாரண டிக்கெட் கொடுப்பதைப் போல செயல்படும் அவலத்தைப் போக்க வேண்டும். இந்த அவலங்களை நீக்கவே இந்த மாபெரும் கையெழுத்து இயக்கம். இதன் நிறைவாக தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து, உடனடியாக மக்களின் கோரிக்கையான தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்ற ஜூலை 22 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தவுள்ளது.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.