நம் சாஷ்திரங்களின் படி ஐந்து பணிகள் உள்ளன , அதாவது ஐந்து வழிபாடுகள் உள்ளன. முதலாவது ஓதுதல். அதாவது ஒவ்வொரு நாளும் நலல புனிதமான நூல்களை படிக்க வேண்டும். இரண்டாவதாக கடவளையோ அவதார புருஷர்களையோ, ஞானிகளையோ வழிபட வேண்டும் .மூன்றாவதவதாக நம் மூதாதையர்களுக்கு நாம் செய்ய
வேண்டிய கடமையை செய்ய வேண்டும் . நான்காவதாக மானிடர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமை.
தேவைப்படு பவர்களுக்கோ, ஏழைகளுக்கோ வீடு அமைத்துத் தராமல் தான் மட்டும் ஒரு
வீட்டில் வசிக்க மனிதனுக்கு உரிமையில்லை. இல்லறத்தானின் வீடு எல்லோருக்கும்
ஏழைகளுக்கோ, துன்பப் படுகிறவர்களுக்கோ திறந்திருக்க வேண்டும். அப்போதுதான்
அவன் உண்மையான இல்லறத்தானாக இருக்க முடியும்.
உலகில் நாம் இருவர் மட்டுமே வாழ்கிறோம் என்ற சுய நலத்துட ன், தானும் தன் மனைவியும் மட்டும் மகிழ்ச்சியோடு வாழ ஒருவன் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்வானாகில், அவன் ஒரு நாளும் ஆண்டவனை நேசிப்பவனாக மாட்டான். அது மிகப் பெரிய தன்னலமான
காரியமாகும். எவனுக்கும், தனக்கு மட்டும் உணவு தயாரித்துக் கொள்ள உரிமையில்லை. மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும். மாம்பழம் போன்ற பருவகாலப் பழங்கள் முதல் முதலாகக் கடைகளுக்கு விற்பனைக்கு வந்ததும் சாதாரணமாக மக்கள் முதலில் ஏழைகளுக்குக் கொடுப்பதற்காகக் கொஞ்சம் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து விட்டுப் பிறகுதான் தாம் உண்பர்.
இது இந்தியப் பழக்கம். அந்தப் பழக்கத்தையே இந்நாடும் பின்பற்றுவது
நல்லது. இப்பழக்கம் ஒருவனை பிறர் பொருட்டு வாழச்செய்கிறது. அத்துடன் அவன்
மனைவி, மக்களையும் அதே பழக்கத்திற்குக் கொண்டு வருகிறது. பழங்காலத்தில்
ஹீப்ரூக்கள் தங்களுக்குச் சொந்தமான மரங்களில் முதலில் பழுக்கும் பழங்களை
ஆண்டவனுக்கு அளிப்பது வழக்கம். ஒவ்வொரு பொருளிலும் முதலில் கிடைப்பது
ஏழைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் எஞ்சியதைப் பெறவே நமக்கு உரிமையுண்டு
ஏழைகள் ஆண்டவனின் பிரதிநிதிகள். துனபப்படும் ஒவ்வொருவனும் ஆண்டவனின்
பிரதிநிதி. பிறருக்குக் கொடாமல் தானே உண்டு மகிழ்ச்சியடைகிறவன் பாவத்தை
புரிகிறhன்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.