அசாம் கலவரத்துக்கு, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களே காரணம். சட்டவிரோத ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு, எந்தமுயற்சியும் செய்யாததால், பூர்விக மக்களை ஆபத்து சூழ்ந்துள்ளது ,என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா மூத்தத்தலைவர் அத்வானி, அசாமில், கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்தார். முகாமில் வசிக்கும் மக்களைசந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
சட்டவிரோதமாக அசாமுக்குள் ஊடுருவும்செயல், பல ஆண்டுகளாகநடந்து வருகிறது . ஏழு வருடங்களுக்கு முன்பு கூட , உச்சநீதிமன்றம், இதுகுறித்து தெரிவித்தது. அதற்கு பிறகும் கூட, மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோத ஊடுருவல் காரர்கலால்தான் தற்போது கலவரம் உருவாகியுள்ளது . வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள், அசாமின் பூர்விக குடி மக்களிடம் இருந்து நிலங்களை அபகரித்து கொள்கின்றனர். இதனால், பூர்விகமக்கள், நிலம் இல்லாத சூழலுக்கு தள்ளபடுகின்றனர்.
கோக்ராஜ்கரில் இருக்கும் முகாமில், நான் சந்தித்த அனைத்து மக்களும் , தாங்கள், வீடிழந்து விட்டதாக கண்ணீர்விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு, மதம் அல்லது ஜாதி சாயம் பூசும், மனபான்மை எதுவும் எனக்கு இல்லை என தெரிவித்தார்
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.