ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு விசாரணை கமிஷன்களின் தலைவர் களாகவோ, நடுவர்மன்ற தலைவர்களாகவோ நியமிக்க கூடாது என பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க சட்டப்பிரிவு சார்பாக டெல்லியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்றதும், குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அவர்களை விசாரணை கமிஷன்களின் தலைவர்களாகவோ, உறுப்பினர்களாகவோ, நடுவர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களாகவோ நியமிக்க கூடாது.
ஏனெனில் அவர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்பாக , இது போன்ற பதவிகள் வழங்கப்படும் என வெளிப்படையாகவோ, மறை முகமாகவோ ஊக்கப்படுத்தும் நிலை இருந்துவருகிறது. இதனால் அவர்கள் அரசுக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள். பாதகமான தீர்ப்புகளை வழங்குகிறார்கள் .
அதற்கு என்னிடம் நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன. எங்கள் கட்சியைச்சேர்ந்த குஜராத் மந்திரி அமித்ஷா அடிக்கடி பொய்வழக்குகளில் சிக்க வைக்கப் படுகிறார். ராஜஸ்தான் மந்திரி ஒருவர் பழிவாங்கபபட்டு, சிறையில் சித்திரவதை அனுபவிக்கிறார். தீவிரவாதத்துக்கு எதிராகபோராடிய பல உயர் காவல்துறை அதிகாரிகள் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு பழிவாங்கப் படுகிறார்கள். எனவே சிபிஐ,யும், நீதித் துறையும் தன்னிச்சையாகவும் , சுதந்திரமாகவும் செயல்பட வேண்டியதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.