கழிவறையையும், கோயிலையும் ஒப்பிட்டு பேசலாமா?

 கழிவறையையும், கோயிலையும் ஒப்பிட்டு பேசலாமா? கோவிலையும், கழிப்பறையையும் ஒப்பிட்டு பேசுவதா? என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷூக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது

இது குறித்து ராஜீவ் பிரதாப் ரூடி டெல்லியில் நேற்று

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒருகருத்தை தெரிவித்துள்ளார். அது மிகவும் கண்டிக்க கூடியது. நம் நாட்டில் கழிவறைகளைவிட கோவில்கள்தான் அதிகம் உள்ளன. என்று பொறுப்புள்ள ஒரு அமைச்சர் தெரிவித்திருப்பது வேதனை தரக்கூடிய ஒன்று . இதுபோன்ற கருத்துக்களை அவர் கூறக்கூடாது. மத நம்பிக்கை உடையவர்களை இது காயப்படுத்தும். கழிவறைகளை உருவாக்குவது, மத வழிபாட்டு தலங்களின் மீது நம்பிக்கை_வைப்பது இரண்டும் வெவ்வேறு. இந்தியா பல கலாச் சாரங்களை கொண்ட ஒருநாடு. சிலர் கோவில் மீது நம்பிக்கை வைப்பார்கள். சிலர் மசூதியின் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள். சிலர் சர்ச்சுகளின் மீதும், இன்னும் சிலர் குருத்துவாராவின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். எனவே நம்பிக்கைகள் இப்படி இருக்க கழிவறையையும், கோயிலையும் ஒப்பிட்டு பேசலாமா? என கேள்வி எழுப்பினார்.

எனவே இது போன்று பேசுவதை விடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது பாதிக்கப்பட்ட இமேஜை சரி செய்ய சிந்திக்க வேண்டும். கோயில் பெரிதா? கழிவறை பெரிதா? என்ற பட்டிமன்றத்தில் இறங்ககூடாது. கழிவறைகளை உருவாக்குவது நிர்வாகத்தின் கடமை. அது தேவையான ஒன்றுதான். அதற்காக மக்களின் மத நம்பிக்கையை கிண்டலடிக்க கூடாது. மதம் மிகமுக்கியமானது. அந்த நம்பிக்கையை பாழ்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது என்று ராஜீவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...