2ஜி ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற கூட்டுக் குழு முன்பாக பிரதமர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோர் ஆஜராகும் வண்ணம், பாராளுமன்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
2ஜி ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோரை கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பிரதமரிடம் கூட்டுக்குழு விசாரணை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இன்று கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி. சாக்கோவுக்கு பா.ஜ., எம்.பி., யஸ்வந்த் சின்கா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கூட்டுக்குழுவிற்கென சிறப்பான இயல்பு உண்டு என்றும், அதன் மூலம் புதிய நடைமுறைகளை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஊழல் நடந்ததாக கூறப்படும் காலத்தில், பிரதமர் என்ற முறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே விளக்க முடியும் என்பதால், அவரை விசாரிக்கும் வகையில் நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2ஜி விவகாரத்தில் பார்லி., பொதுக்கணக்குக்குழு முன்பாக ஆஜராக தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என முன்பு மன்மோகன் சிங் கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள சின்கா, தற்போது, கூட்டுக்குழு விசாரணையில் அவர் ஆஜராவதில் எவ்வித தடையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.