பாஜக தலைவர் நிதின் கட்காரி மகாராஷ்டிரவில் ஆளும் அரசுடன் இணைந்து பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தியிருந்தார் . குறிப்பாக நீர் பாசன திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், ஏழை மக்களின் நிலங்களை தனது
நிறுவனங்களுக்காக அபகரித்து கொண்டதாகவும் குற்றம்சுமத்தியிருந்தார் .
இந்த குற்றச்சாட்டுகளை கட்காரி மறுத்துள்ளார் மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-
என்னை வியாபாரி என கூறுவது நகைப்புக்குரியது. விதர்பாவில் உள்ள விவசாயிகளுக்காக நான் பணியாறுகிறேன். விவசாயிகளின் நன்மைக்காக அரசு உதவியுடன் சமூக பணியாற்றுகிறேன். அதற்காக பொதுநிறுவனங்களை உருவாக்குகிறேன். ஏழைமக்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் எனது புகழை குலைப்பதற்காக அரசியல்நோக்குடன் இவ்வாறு பழி சுமத்துகிறார்கள்.
ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்திவருவதால், அரசியலில் பா.ஜ.க நல்ல இடத்தைபெற்றுள்ளது. அதேபோன்று அவர்களும் (கெஜ்ரிவால் குழுவினர்) அந்த இடத்தைப்பிடிக்க ஆசைப்படுகிறார்கள் . என் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவிசாரணைக்கும் தயாராக உள்ளேன் .
விவசாயிகளின் நிலத்தை அபகரித்து கொண்டதாக கூறுகிறார்கள். ஒரே ஒருவிவசாயி மட்டும் நிலத்தை கேட்டார். அந்த விவாசயி இன்று வரையில் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அங்கேசென்று பாருங்கள். அவரிடம் இருந்து நிலத்தை நாங்கள் எடுக்கவில்லை. என்று தெரிவித்தார்
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.