குஜராத்தில் சென்ற 2002-ம் வருட வகுப்பு கலவரத்துக்கு பிறகு இங்கிலாந்து அரசின் தவறான புரிதலின் காரணமாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடனான நேரடிசந்திப்புகளை இங்கிலாந்து அதிகாரிகள் தொடர்ந்து தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் இவ்விவகாரத்தில் உண்மை நிலையை உணர்ந்த இங்கிலாந்து அரசு
தனது கொள்கையை திடீரென மாற்றிக்கொண்டது , உயர் ஆணையர் ஜேம்ஸ்பெவன் அகமதாபாத் சென்று மோடியை சந்திப்பார் என்று இந்த மாதம் அறிவித்தது.
இந் நிலையில், இந்தியாவுக்கான இங்கிலாந்தின் மூத்த தூதர் ஜேம்ஸ் பெவன், முதல்வர் நரேந்திரமோடியை சந்தித்துள்ளார் . இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடநேரம் தொடர்ந்து நீடித்தது. வரும் 2014-ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படலாம் எனும் எதிர்பார்ப்புகள் பரவலாக நிலவிவரும் நிலையில் இந்த திடீர்சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.