இத்தனை கோடிபேர் நாம் இருக்கும் போது, ஆதரவற்றவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது. ஆதரவற்றவர்கள் என யாரும் இருந்தால் அது தேசத்துக்கு அவமானம், என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார் .
திருப்பூர் இருக்கும் கொடுவாய், வஞ்சி பாளையம் பிரிவில், தமிழ் செல்வன் நினைவு அறக் கட்டளை பாரதியார் குரு குலம் புதியகட்டட திறப்பு விழா, நேற்றுநடந்தது. இதில் ஆர்எஸ்எஸ்., மாநில தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் . இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன், கட்டடத்தை திறந்து வைத்தார் .
கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது; குழந்தைகள், முதியவர்களுக்காக மூன்றுகோடி ரூபாய் செலவில் குரு குலம் அமைக்கப் பட்டுள்ளது. திருப்பூருக்கு ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்று பெயர் இருந்தது. அதாவது பணம் கொழிக்கும் நகரம் , மகாலட்சுமி குடியிருக்கும் ஊர். தற்போது தொழில்கொஞ்சம் நொடித்திருந்தலும் . மீண்டும், கடவுள் அருளால் பழையநிலைக்கு திருப்பூர் திரும்பும். நல்ல உள்ளங்களால் இந்த குரு குலம்வளர்ந்துள்ளது.
இத்தனை கோடிபேர் நாம் இருக்கும் போது, ஆதரவற்றவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது. யாராவது ஆதரவற்றோர் இருந்தால் அது தேசத்துக்கே அவமானம். பழனி பாதயாத்திரை செல்வோருக்கு, இந்த குரு குலம் பயன்படும். என்று அவர் பேசினார்.
ஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் பேசியதாவது; தாய், தாய் நாடு இரண்டும் ஒன்று தான். நல்லமகனாக இருந்து தாயை காப்பது போல், இந்த தாய் நாட்டையும் காக்கவேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் உணர்வுவந்தாலே, தேசம்பாதுகாப்பாக இருக்கும். சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், பாரதியார் போன்றோரின் தியாகம் போற்றப்படுகிறது. நாம் பாரதத்தில் பிறந்ததால் அதிஷ்டசாலி கள். கடவுள வாழ்ந்த நாட்டில் நாம்வாழ்கிறோம் என்று பெருமைப்படவேண்டும், என்றார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.