நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என மேற்கு வங்க முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான, மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதித்தது, பெட்ரோல் விலைஉயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளைஎதிர்த்து சில மாதங்களுக்கு முன்பு , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ்கட்சி வெளியேறியது. இதனால் மத்திய அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது .
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மமதா. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில மத்திய_அரசுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் .
தொடர்ந்து மக்கள விரோத முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது . எனவே மத்திய அரசை தூக்கிஎறியவும் பொதுத்தேர்தல் மூலமாக புது அரசை கொண்டுவரவும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர படுகிறது.
எதிர்கட்சியான பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு நாங்கள் தயார். எங்கள் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்றார் அவர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.