கிருத்துவ மதம் சார்ந்தவர்களை புண்படுத்துவது அல்ல இந்தப் பதிவின் நோக்கம். .நிதானமாக படித்துவிட்டு பின்னர் தங்களது பின்னூட்டங்களை நாகரீகமாக வைக்கும் படி வேண்டுகோள் வைக்கின்றேன்..
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை பீச் டு தாம்பரம் வரை செல்லும் மின்சார இரயிலில் பீச் ஸ்டேஷனில் கடந்த சனியன்று மாலை 7
மணியளவில் பயணிக்க நேரிட்டது. நான் ஏறிய பெட்டி காலியாக இருந்தது. நான் பயணம் செய்த பெட்டியில் கல்லூரிமாணவிகள் வயதுடைய அழகாக இளம் பெண்கள் 12 பேர் மற்றும் வாலிபர்கள் 4 பேர் என்று ஏறி எல்லாம் இருக்கைகள் காலியாக உள்ள ஒரே இடத்தில் அமர்ந்தனர். வாலிபர்களிடம் இசைக்கருவிகள் இருந்தன. கிடார் வாத்தியம் கையில் வைத்திருந்த நபர் மியூசிக் மாஸ்டர் போலும். கிடாரை இசைத்துக்கொண்டு அந்த மாணவிகளுக்கு உரக்க பாட்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். எல்லாரும் அவருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தனர்.. நான் அவர்களது இருக்கைக்கு நான் வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்தேன். மின்சார் வண்டி கோட்டை இரயில் நிலையத்தில் நின்றது. மீதி காலியாக இருந்த இருக்கைகளில் பயணிகள் அமர்ந்தனர். வண்டி புறப்பட்டது. அந்த இளைஞர் சில பாடல்களை இராகத்துடன் செல்லிக்கொடுக்க அந்த இளம்பெண்கள் கோரசாக பாட ஆரம்பித்தனர். எல்லாம் ஏசுபிரானின் கீதங்கள். ஓ.. கிருஸ்துமஸ் பண்டிகை வருகின்றதே.. அதற்கான ஒத்திகையாக இருக்கும் என எண்ணியபடியே அமர்ந்திருந்தேன். ரயிலில் பயணித்த அனைவரது பார்வையும் அவர்களின் பக்கம் திரும்பி இருந்தது.
அடுத்து பார்க் ஸ்டேஷன் வந்துவிட்டது. கூட்டம் அளவுக்கதிமாக வண்டியில் ஏறினர்.. ஆனால் அந்தக் குழுவினரோ யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தங்களது பணியினை தொடர்ந்தனர். தொடர்ந்தாற்போன்று பல ஏசுபிரான் பற்றிய பாடல்கள் உரத்த குரலில்.. இந்த முறை அவர்சொல்லிக்கொடுக்கவே இல்லை. ஒன் டூ, த்ரீ என்று சொன்னவுடன் பாடல்கள் பாடிக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் அவர்களுக்குள் பலத்த கைத்தட்டல்கள் வேறு. பயணித்த பயணிகளுக்கு சற்று தர்ம சங்கடம் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் யாரும் எந்த எதிர்ப்பினையும் காட்டவில்லை. மாறாக சிலர் தங்களுடைய மொபைல் போன் கருவியை ஹெட்செட்டில் இணைத்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் பேப்பர் மற்றும் வைத்திருக்கும் புத்தகங்களில் கவனம் செலுத்தினர். சிலர் மட்டும் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர்.
மின்சார இரயில் சைதாப்பேட்டை வந்தபோது எதேச்சையாக என் நண்பரொருவர் நான் பயணம் செய்த பெட்டியில் ஏறினார்.. என்னைப்பார்த்த தும் என்அருகில் வந்தமர்ந்தார். 'ஓ இவங்க இன்னைக்கு இந்த கம்பார்ட்மென்ட்ல வர்றாங்களா? தாம்பரம் வரை இவங்க போடற சத்தம் தான் அதிகமாக இருக்கும்' என்றார்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்னசார் விஷயம் இவர்களை உங்களுக்குத் தெரியுமா' என்றேன். அவர் சொன்னார். 'சார் இவங்க தாம்பரத்துல ஏறி பீச் வரைக்கும் பாடிக்கிட்டு போவாங்க. அப்புறம் பீச்லேந்து தாம்பரம் வரைக்கும் பாடிகிட்டு வருவாங்க.. நான் இவர்களை நான்கைந்து முறை பார்த்திருக்கின்றேன்' என்றார். நீங்க தாம்பரத்துல இறங்கி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணீங்கன்னா இவங்க அடுத்து பீச் கிளம்பற வண்டியில் ஏறுவாங்க பாருங்க' என்றார். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் அவர்களின் இந்த ஆரவாரங்களை யாரும் எதிர்த்துக்கேட்கவில்லை..
தாம்பரம் நிலையத்திற்கு இரயில் வந்தபோது அவர்களும் என்னுடன் இறங்கினார்கள். நானும் நண்பரும் இறங்கி என்னதான் செய்கின்றார்கள் பார்ப்போமே என்று பின் தொடர்ந்தால் நண்பர் சொல்லியது போல பீச் ஸ்டேஷன் செல்லும் காலியாக உள்ள வண்டியில் ஏறி அமர்ந்தனர்.
எனக்குப்புரிந்தது. இவர்கள் மதப்பிரச்சாரத்தை இப்படி செலவில்லாமல் கவர்ச்சியான முறையில் செய்து கொண்டிருப்பவர்கள் என்று. அனைவரது பார்வையும் தங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்பதற்காக இப்படி அழகான இளம்பெண்களை உடன் அழைத்துக்கொண்டு வந்து பாடல்கள் செல்லிக்கொடுப்பது போன்ற ஒரு பாவனையை உருவாக்கி இப்படியான மதப்பிரச்சாரங்களை செய்கின்றனர். ரயில் என்பது அனைத்து தரப்பினரும், அனைத்து மதத்தினரும் பயணிக்கும் இடமாகும்.. இதில் இப்படியாக வாத்தியக்கருவிகளை வைத்துக்கொண்டு கோரசாக ஒரு மதம் சார்ந்த பாடல்களைப் பாடிக்கொண்டு மற்றவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தி இப்படியான மதப்பிரச்சாரம் செய்வது அவசியம் தானா? மதங்கள் பற்றிய செய்தியை இப்படித்தான் மக்களுக்கு போதிக்கவேண்டும் என்று பைபிள் கூறுகின்றதா?
இன்னொன்றையும் இங்கு சொல்லவேண்டும். எந்த இந்துவும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை இந்துவாக மாற்ற முயற்சிப்பதில்லை.ஒரு சீக்கியன் மற்ற மதத்தினரை மதம் மாற்ற முயற்சிப்பதில்லை. இப்படி இந்தியாவில் கிருத்துவர் அல்லாத நபர்கள் தங்கள் மதம் சார்ந்தவற்றில் பற்றுகொண்டுள்ளனரே தவிர மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை தம் மதத்திற்கு மாற்ற முயற்சிக்காத போது கிருத்துவர்களில் சிலர் ஏன் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்று தெரியவில்லை.
கிருத்துவ மதபோதகர்காளகட்டும் சரி, அதில் ஊழியம் செய்பவர்களாகட்டும் சரி, ஒரு குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் வலியச் சென்று பிரார்த்தனைகள் செய்கின்றனர். அவர்கள் தெரிந்தவர்களோ தெரியாத வர்களோ என்ற பேதம் இல்லாமல்.. ஆனால் ஒரு இந்துவோ ஒரு முஸ்லிமோ, ஒரு சீக்கியனோ தன் உறவுகள் மட்டுமின்றி அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அங்கு சென்று பிரார்த்தனை செய்வது இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
இப்படி உடல் நலமில்லாத குடும்பத்தில் அவர்கள் இந்துவாக இருக்கலாம் அல்லது கிருத்துவர் அல்லாத வேற்று மதத்தவராக இருக்கலாம். வீடுதேடி வந்து பிரார்த்தனைகள் செய்வதின் பின்னணி மதமாற்றத்தை அவர்களிடையே ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் சமீப காலமாக நம் நாட்டில் மத மாற்றங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த மதமாற்றம் மற்றவர்களது, பொருளாதார நிலை, குடும்பச் சூழ்நிலை, கல்வி ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே நடத்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை..
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.