நரேந்திர மோடி கடந்து வந்த பதை

 இன்றைய தேதியில் நரேந்திரமோடிக்கு நிகராக இன்னொரு தலைவர் இழிவு படுத்தப்பட்டதே இல்லை. இத்தனை தீவிரமாக எதிர்க்க பட்டதும் இல்லை. பரிசீலனை இன்றி, நிராகரிக்க பட்டதும் இல்லை. சாதி அரசியல் மேலாதிக்கம்செலுத்தும் இன்றைய சூழலில், சாதி அடிப்படை யில் அரசியலுக்குவராத தலைவர் மோடி என்பது எத்தனைபேருக்குத்

தெரியும்? மோடி அளவுக்கு திட்ட மிட்டு ஆட்சி நடத்தும் இன்னொரு மாநில முதல்வர் இங்கேஇல்லை என்பதை எத்தனைபேர் ஏற்பார்கள்? 'நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே எதிர் கால வளர்ச்சிக்கு அவசிய மானது!' என்கிறார் மோடி.

சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் குஜராத்தில் அவர் இதனை செயல் படுத்தியும் இருக்கிறார் என்பதை அறிந்திருந்தும் அவரை எத்தனைபேரால் வெளிப்படையாக பாராட்ட முடிகிறது?

நரேந்திர தாமோதர தாஸ் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று குஜராத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் இருக்கும் வத்நகர் என்னும் பகுதியில் வசித்த ஒருநடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 3வது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். மோடி குடும் பத்தினர் காஞ்ஜி என்னும் தாழ்த்தப்பட்ட இந்து மதப்பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது, இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பை(ஓபிசி) சேர்ந்தவர்கள். குஜராத்தில் இந்தப்பிரிவினர் ஒரு சதவிகிதத்தை விடக் குறைவானவர்களே.

பள்ளியில் படிக்கும் போது, ரயில் நிலையத்தில் தன்தந்தை நடத்திவந்த டீக்கடையில் மோடி உதவியாளராக இருந்திருக்கிறார். பகவாதாச் சாரிய நாராயணச் சாரிய மேல்நிலை பள்ளியில் குஜராத்திவழி கல்வி பயின்றார். சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸ் மீது ஈர்ப்பு ஏற்பட்ட்டு 1958ல் ஒரு தீபாவளி அன்று தானே முன் வந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டு ஒருதொண்டராக இயக்கத்தில் இணைந்தார் மோடி. அப்போது அவருக்கு வயது 8.

பள்ளியில் மோடி ஒருசராசரி மாணவராகவே இருந்திருக்கிறார் என்பதை அவருக்கு பாடம் நடத்திய பிரகலாத்படேல் என்னும் ஆசிரியரின் மூலம் அறிய முடிகிறது. ஆனால், எதையும் 'மிகுந்த ஆர்வத் துடனும் தனித் தன்மையுடன்' செய்துமுடிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்திருக்கிறது என்கிறார் படேல். பள்ளியில் இவர் தொடங்கி வைத்த விவாதக்குழுவில் மோடி ஆர்வத்துடன் பங்கேற்றிருப்பதை இவர் நினைவு கூர்கிறார்.

அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார் . நெருக்கடிநிலை அமலில் இருந்த சமயத்தில் மோடி போராட்டங் களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போது பல அரசியல் தலைவர்களின் அறிமுகம்கிடைத்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாறிய போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு மந்திரிபதவி கிடைத்தது. மோடியின் அயராத, தன்னல மற்ற ஈடுபாட்டை நேரடியாக கண்டிருந்ததால் அவர்களுக்கு மோடி மீது நாட்டம் மிகுந்திருந்தது. 'ஒருகடுமையான உழைப்பாளர்' என மோடியை அவர்கள் மதிப்பிட்டி ருந்தனர்.

1980ம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைபட்டம் பெற்றார் மோடி. ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கான அடிப்படை பயிற்சிகளையும் அவர் முடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் வயது 23. நெருக்கடிநிலை முடிந்தபிறகு நாக்பூருக்குச் சென்ற மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் 2வது மற்றும் 3வது நிலை பயிற்சிகளை மிக ஆர்வத்துடன் முடித்தார். பா.ஜ.க,.வில் அவர் பிறகு இணைவதற்கு இது வழி வகுத்தது என சொல்லலாம்.

 
  அகமதாபாத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் தன் மாமாவின் கேன்டீனில்நரேந்திர மோடியின் வரலாறு சிறிதுகாலம் வேலைசெய்தார். பிறகு, கீதாமந்திர் என்னும் இடத்தில் சைக்கிளில் தேநீர் விற்பனைசெய்ய ஆரம்பித்தார். பல ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இவரது கடைக்குவருவது வழக்கமாக இருந்தது. இயக்கத்தோடு இணைந்து பணியாற்றலாம் என அழைப்புவர, மோடி அகமதாபாத் கிளையில் உதவியாளராக இணைந்து கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்எஸ்எஸ் அவரை உள்வாங்கி கொண்டது. பொறுப்புகளும் பதவிகளும் வந்த படி இருந்தன. அலுவலக வேலை தொடங்கி பெரும் மாநாட்டுப்பணிகள் வரை அனைத்தையும் முன்னின்று ஆர்வத்துடன் செய்து கொடுத்தார்.

பா.ஜ.க,.வில் இணைந்த மோடி, ஒரே வருடத்தில் (1987ல்) குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார். 8 வருடங்களில் பாஜகவுக்குப் புத்துயிர் ஊட்டினார்.1985ல் பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 11. 10 வருடத்தில் இந்த எண்ணிக்கை 121ஆக உயர்ந்தது. அத்வானியின் அயோத்தியா ரதயாத்திரையையும், சங்கர் சிங் வகேலா  தலைமையிலான (கன்யா குமரியில் இருந்து காஷ்மிர் வரை) யாத்திரையையும் நடத்தும்பொறுப்பு மோடிக்கே வழங்கப்பட்டது.

பாரதிய ஜனதாவின் பொதுச்செயலாளராக, 5 பெரிய மாநிலங்களான இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மற்றும் ஜம்மு காஷ்மிரை கவனித்துக் கொண்டார். 1998ல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற போது மோடிக்கு தேசியசெயலாளர் (அமைப்பாளர்) பொறுப்பு வழங்கப்பட்டது. 1999ல் நடந்த கார்கில் போரின் போது நரேந்திரமோடி பாரதிய ஜனதாவின் முக்கிய பேச்சாளராக தேசிய அளவில் அறியப்பட்டார்.

பாரதிய ஜனதா அரசின் செல்வாக்கும் கட்சியின் வளர்ச்சியும் கடுமையாக பின்னடைவை சந்தித்த தருணம் அது. 2001ல் ஏற்பட்ட குஜராத் பூகம்பத்தை தொடர்ந்து அந்த மாநில நிர்வாகம் மோசமான சரிவை சந்தித்தது. இந்தப்பின்னணியில், கட்சியின் தேசியத் தலைமையின் கோரிக்கையை ஏற்று குஜராத் மாநில முதல்வராக அக்டோபர் 2001ல் மோடி பதவிஏற்றார்.

மோடி வகித்த முதல் அரசாங்கப்பதவியே, முதல்வர் தான். அது நாள் வரை எந்தவொரு தேர்தலிலும் மோடி பங்கேற்றதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் மீது பா.ஜ.க தலைமை வைத்திருந்த அளவிட முடியாத நம்பிக்கையே அவருக்கு இந்தவாய்ப்பை பெற்றுத் தந்தது.

2001 வரை மோடி கட்சிவட்டாரம் தவிர வெளியில் அறியப் படாதவராக இருந்தார். 'நான் இங்கே ஒருமேட்ச் ஆட வந்திருக்கிறேன்!' என சொல்லிதான் முதல்வர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார். இன்று, 12 ஆண்டுகளை மோடி ஒருமுதல்வராக நிறைவு செய்துள்ளார். இடைவிடாமல் மூன்று முறை முதல்வர் பதவியை அவர் வென்றெடுத் துள்ளார்.

மோடி தன்னை 'வளர்ச்சியின் நாயகன்' என அழைத்து கொள்கிறார். இந்த நாயகனின் சில சிறப்பம் சங்கள். இவரது அலுவலக பணிநேரம் காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை நீள்கிறது. கூட்டம் எதையும் இவர் தனக்குப்பின்னால் சேர்த்துக் கொள்வதில்லை. 3 உதவியாளர்கள் மட்டுமே உள்ளார்கள் . இத்தனை வேலைப் பளுவுக்கு இடையிலும், இணையத்தில் அதிகநேரம் செலவிடும் முதல்வராக இவர் ஒருவரே உள்ளார் .

கடந்த 10 வருடத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மற்றமாநிலங்கள் முன்னு தாரணமாகக் கொண்டுள்ளன. அமெரிக்கா மோடிக்கு விசாகொடுக்க மறுத்தது மட்டுமே இங்குசெய்தியானது. ஆனால், நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் சிறந்த நிர்வாகத்துக்கான உதாரணம் என அதே அமெரிக்கா தான் புகழாரமும் சூட்டியுள்ளது.

மோடி பிரதமரானால் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாகி விடும் என்கிறார்கள் அவரை ஆதரிக்கும் தொழிலதிபர்கள். குஜராத்தைப்போல் இந்தியாவையும் அவர் வளம்மிக்க, பலம்மிக்க ஒரு தேசமாக மாற்றுவார் என்பது அவர்களுடைய எதிர் பார்ப்பு. மேலும் மோடி முதல்வரானால் பொருளாதார நடவடிக்கைகள் ஒழுங்கு படுத்தப்படும் என்றும் அரசு அலுவலகங்களில் இருக்கும் சிவப்பு நாடா நடை முறை ஒழிக்கப்படும் ,ஊழல் அழிக்கப்படும் ,பயங்கரவாதம் வெல்லப்படும் என அவர்கள் நம்புகிறார்க ள்.

ஒருநாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படைத்தேவை, பொருளாதார சுதந்தரம். இது இல்லா விட்டால் பூரண சுதந்தரம் கிடைத்து விட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து. மோடியின் கருத்தும் இதுவே தான். அரசியல், சமுதாய சுதந்தரத்தோடு சேர்த்து பொருளாதார_சுதந்தரமும் இருப்பது ஒருநாட்டுக்கு அவசியமானது என்கிறார் மோடி. அந்தவகையில் குஜராத்தை ஒரு முன் மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டியதில் அவருடையபங்கு முக்கியமானது.

இது நெருக்கடியான கால கட்டம். நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு, வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் ஒருதலைவரே அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும். நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான திறமையையும் வலிமையையும் அவர் பெற்றிருக்க வேண்டும். தான் ஒரு தகுதியான தலைவர் என்பதை நரேந்திரமோடி தனது நடவடிக்கைகளாலும் செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். வேறு என்ன ஆதாரம்வேண்டும்?

Tags; நரேந்திர மோடியின் வரலாறு , நரேந்திர மோடியின் வாழ்க்கை குறிப்பு, நரேந்திர மோடிக்கு,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...