திரவிட கட்சிகளும் தமிழ்நாடு மின்சாரமும்.

திரவிட கட்சிகளும் தமிழ்நாடு மின்சாரமும். குட்டிக்கதை: கேசவபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகப்பெரிய கொடுங்கோல் ஆட்சியாளனாக திகழ்ந்தான்..அவனது ஆட்சியில் பஞ்சமும் , பட்டினியும் தலைவிரித்தாடியது..

தன் நாட்டு மக்களின் நலனைவிட வரி என்ற பெயரில் தன் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான்.. ..தன் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மூட்டை அரிசியை கொண்டு வந்து அரசு கஜானாவில் கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக ஒரு மூட்டை நெல்லை வாங்கி கொண்டு செல்லவேண்டும் என்று திடிரென ஒரு கட்டளையை பிறப்பித்தான்..என்ன செய்வது அரச கட்டளை ஆகிவிட்டதே..மீறினால் தண்டனை பலமாகயிருக்கும் என்பதால் மக்களும் அவ்வாறே செய்தார்கள்..

மன்னனது கொடுமை தாங்க முடியாமல் மக்களும் இந்த அயோக்கியன் எப்போது இறந்து போவானோ என்று வேண்ட ஆரம்பித்து விட்டார்கள்..அவர்கள் வேண்டுதல் வீண்போகவில்லை..ஒரு நாள் மிகப்பெரிய நோயினால் பாதிக்கப்பட்டு மன்னன் படுத்த படுக்கையானான்..மன்னன் சாகும் தருவாய்க்கு சென்றதும் இளவரசனை அழைத்தான் மன்னன்,

” கஜேந்திரவர்மா.. நான் ஆட்சி செய்தவரையிலும் மக்களை வரி என்கிற பெயரில் கொடுமைப்படுத்திவிட்டேன்.. என் ஆட்சியில் யாருமே சந்தோசமாக இருந்ததில்லை.என்னை வயிறெரிந்து திட்டியவர்கள்தான் அதிகம்..என் மக்களுக்கு மிகப்பெரிய பாவமிழைத்துவிட்டேன்..எனவே நீ மன்னனானதும் என்னை திட்டிய மக்கள் அனைவரும் என்னை புகழும்படி ஏதாவது செய்யடா..அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்..” என்று சொல்லிவிட்டு இறந்து போனார்..

மன்னரின் ஈமகிரியைகள் முடிந்த பின் ஒருநாள் இளவரசன் கஜேந்திரவர்மனுக்கு பொதுமக்கள் புடைசூழ மன்னனாக முடிசூட்டு விழா நடந்தது . முடிசூடிக்கொண்ட மறுநாளே கஜேந்திரவர்மன் பொதுமக்களுக்கு ஒரு கட்டளையை பிறப்பித்தான் . இனிமேல் பொது மக்கள் கஜானாவுக்கு ஒரு மூட்டை அரிசியை கொண்டுவந்து கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக ஒரு மூட்டை உமியை வாங்கி செல்லவேண்டும் என்பதுதான் அந்த கட்டளை..

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் , அடப்பாவி இந்த மன்னன் நாசமா போக வேண்டும்..பழைய மன்னனாவது மவராசன்.ஒரு மூட்டைஅரிசிக்கு ஒரு மூட்டை நெல்லையாவது குடுத்தான்.இந்த மன்னன் ஒரு மூட்டை உமியையல்லவா கொடுக்கிறான். நெல்லைகொண்டு பாதிவேளை பட்டினியாவது தீர்ந்தது..உமியை கொண்டு என்ன செய்வது ? இவனுக்கு அந்த புண்ணியவான் ஆட்சி எவ்வளவோ மேல். என்று ஆளாளுக்கு பழைய மன்னனை புகழ ஆரம்பித்தார்கள். கஜேந்திரவர்மனும் தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்ட திருப்தியில் மகிழ்ச்சி அடைந்தான்.

Source : via Saravanan Ram

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...