சமாஜவாதியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசுப் பணியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு பாஜக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. சமாஜவாதி வெளிநடப்பு செய்தது. மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு திங்கள்கிழமை நடக்கிறது.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சாசன 117ஆவது சட்டத் திருத்த மசோதாவை (2012) பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். “”எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்களது பிரதிநிதித்துவம் அரசுப் பணிகளில் போதிய அளவில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும் இந்த இடஒதுக்கீடு அவசியமாகிறது” என்றார் நாராயணசாமி.
இந்த மசோதாவின்படி, அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 22 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். எனினும், அவர்களின் பணித்திறன் மற்றும் நடத்தை தொடர்பான ரகசிய அறிக்கையை கருத்தில் கொண்டு பதவி உயர்வு அளிக்கப்படும்.
இந்த மசோதாவுக்கு சமாஜவாதிக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளித்துள்ளது. சிவசேனைக் கட்சி ஆதரிக்கவில்லை.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு திங்கள்கிழமை நடைபெறும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்தால்தான் மசோதா நிறைவேறும்.
இந்த மசோதா தொடர்பான விவாதத்தை தொடங்கிவைத்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், “”சமூக நீதியை ஏற்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது. நூற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் இருப்போருக்கு முன்னேற்றத்தை இது அளிக்கும். எனினும், பதவி உயர்வு அளிக்கும்போது, திறமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால், நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியதாவது: “”மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் பின்தங்கிய நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம். அவர்கள் முன்னேற்றம் அடைய அக்கட்சி எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஆனால், இந்த மசோதாவின் தேவையை நாங்கள்தான் அக்கட்சி உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூற வேண்டியிருந்தது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள உயர் ஜாதியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கலாம்” என்றார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.