குஜராத்தின் கட்ச்வளைகுடா பகுதியில் இருக்கும் “சர் கிரீக்” என்ற சதுப்பு நிலப் பகுதியை பாகிஸ்தானுக்கு தாரைவார்ப்பதன் மூலமாக நாட்டை விற்றுவிட பார்க்கிறார் பிரதமர் மன்மோகன்சிங் என நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைக் குரிய எல்லைப்பகுதிகளில் ஒன்று குஜராத்தின் கட்ச்வளைகுடாவில் உள்ள “சர் கிரீக்” சதுப்புநிலம். இந்த விவகாரம்தொடர்பாக இரண்டு நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இதை மன்மோகன்சிங் பாகிஸ்தானுக்கு தாரைவார்க்க பார்க்கிறார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலிசர்தாரி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லிக்கு வந்த போது விருந்து சாப்பிட்டார்களே அப்போதே இந்த பேரத்தை போட்டு விட்டது தெரியும். ஆகஸ்ட் மாதம் அவர் போர்பந்தர்வந்து இது குறித்து விவாதிக்கவில்லையா? கடந்த டிசம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானின் சிந்த்பகுதியை சேர்ந்த பிரதிநிதிகளும் குஜராத் தலைவர்களும் இது குறித்து விவாதித்திருக்கின்றனர்.
நான் ஏதோ தேர்தலுக்காக இதைப்பேசவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில்நடந்த முதல்வர்கள் மாநாட்டிலும் இது பற்றி பேசினேன். ஆனால் நீங்கள்தான் வாயே திறக்கவில்லை என்றார்.
ஏற்கனவே, சர்கிரீக் பகுதியை பாகிஸ்தானிடம் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது , வரும் டிசம்பர் 15ஆம் தேதி சர்கிரீக் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. அம்முடிவை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நரேந்திரமோடி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.