2013 ம் வருடத்தில் 9 மாநிலங்களில் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது . இது குறித்த ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது .இதில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளராக பாஜக ., துணை தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி பொறுப்பேற்றுள்ளார்..
இது குறி்த்து அவர் தெரிவித்ததாவது ; தற்போது ம.பி, கர்நாடகா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சிசெய்து வருகிறது. ராஜஸ்தான், புதுடில்லி, நாகலாந்து, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களி்ல் காங்கிரஸ்சின் ஆட்சி நடந்து வருகிறது. திரிபுரா வில் கம்யூ.,, ஆட்சி செய்துவருகிறது.
மேற்கண்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மீண்டும் ஆட்யமைக்கவும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை கைப்பற்றவும் தேர்தல் வியூகம் வகுப்படும். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.,எம்.பிக்கள் என்று அனைவரும் தேர்தல் பணிசெய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் செய்திருக்கும் சாதனைகளை மக்களிடம் எடுத்துகூறியும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகரித்துவரும் ஊழல் மற்றும் அரிசி விலை ஏற்றம் போன்றவைகளை தேர்தல்பிரசாரத்தில் முன்னிலைப் படுத்தப்படும் என்று கூறினார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.