குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ‘அரசர்களின் அரசர்’ என தொழிலதிபர் அனில் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார். குஜராத் மாநில தொழில்வளர்ச்சி தொடர்பாக இந்திய தொழிலதிபர்கள் சந்திப்பை நரேந்திரமோடி இன்று நடத்தியிருந்தார்.
இதில் குஜராத்தின் தொழில் அதிபர்கள் முகேஷ்அம்பானி, அனில் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, விசாலமான பார்வைகொண்ட தலைவர் நரேந்திர மோடி. குஜராத் மாநில அரசுடன் இணைந்து ரூ500 கோடியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியோ அரசர்களின் அரசராக திகழ்பவர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார். மேலும் மகா பாரத அர்ச்சுனனை போல் தெளிவான சிந்தனைகொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார். உலகம் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய மிகப் பெரிய காந்தமாக இருப்பவர் நரேந்திரமோடி என்றும் அனில் அம்பானி பாராட்டினார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.