வளர்ச்சியை ஏற்படுத்தாத, எந்த ஒரு ஆட்சியும் நீடிக்காது; மக்கள் அதை போன்ற ஆட்சியை விரும்புவதில்லை,” என்று , சென்னை வந்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.
சென்னையில் நடந்த பிரபல தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள,வந்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தமிழக, பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர், வரவேற்றனர்.
அங்கு அமைக்கப் பட்டிருந்த பிரத்யேக மேடையில் ஏறி, அங்கு கூடியிருந்த_தொண்டர்களை பார்த்து கை அசைத்த மோடி, பேசியதாவது: மக்களுக்கு, வளர்ச்சிப்பசி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்தாத எந்த ஒரு ஆட்சியும், இனி நீடிக்கமுடியாது. வளர்ச்சியை உருவாக்காத ஆட்சியை, மக்கள் விரும்பு வதில்லை. பா.ஜ.க., மட்டுமே மக்களுக்கு நன்மைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என்பதை, நான் பெருமைபட கூறுவேன்.குஜராத்மக்களின் வளர்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் பாதை அமைத்து கொடுத்ததால்தான், அங்கு மீண்டும், அமோகவெற்றி பெற்று, முதல்வராக என்னால், பதவியேற்க முடிந்தது.
மத்தியில் இருக்கும் ஐ.மு.கூட்டணி அரசு, நாட்டை பின்நோக்கி அழைத்துச்செல்கிறது. மக்கள் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் உருப்படியாக செயல்படுத்த வில்லை. இந்த ஆட்சியால், மக்கள் பெரும்ஏமாற்றம் அடைந்துள்ளனர். விவேகானந்தரின், 150வது ஆண்டுவிழாவை, நாம் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில், நாட்டுமக்களுக்கு ஒரு நல்ல_ஆட்சி ஏற்பட பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை, அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.என்று நரேந்திர மோடி பேசினார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.